News April 13, 2025

கடலூர் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கோடை மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்றும் தமிழகத்தில் இரவு 7 மணி வரை ஒரு சில மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், கடலூரில் லேசான மழை முதல் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் எச்சரிக்கையுடனும் பாதுகாப்பாகவும் இருக்க அறிவுருத்தப்பட்டுள்ளது. SHARE பண்ணுங்க

Similar News

News August 5, 2025

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; குண்டாஸில் இளைஞர் கைது

image

கடலூரை சேர்ந்த 12 வயது சிறுமி, கடலூரில் உள்ள ஒரு பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வருகிறார். அம்மாணவியை கிள்ளை எம்.ஜி.ஆர். திட்டு பகுதியை சேர்ந்த இமயவரம்பன்(25), என்பவர் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்தது தெரிந்தது. இந்நிலையில், மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் பரிந்துரைபடி, மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உத்தரவின்பேரில் இமயவரம்பன் நேற்று குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

News August 5, 2025

கடலூர்: டிகிரி போதும் அரசு வேலை!

image

கடலூர் இளைஞர்களே, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள மொத்தம் 126 காலிபணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதில் டிகிரி, பொறியியல், MBA என பல்வேறு பட்டப்படிப்பு படித்தவர்கள் ஆகஸ்ட் 17-ம் தேதிக்குள் <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த பணிகளுக்கு ரூ.20,000 முதல் ரூ.1.5 லட்சம் வரை தகுதிக்கேற்ப சம்பளம் வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை உடனே SHARE பண்ணுங்க.

News August 5, 2025

கடலூர்: இதை கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க!

image

கடலூர் மாவட்டம் தமிழகத்தில் முக்கிய மாவட்டமாகும். இம்மாவட்டத்தில் உள்ள தாலுகாக்ககளை பற்றி அறிந்து கொள்வோம். ▶️ சிதம்பரம், ▶️ பண்ருட்டி, ▶️ ஸ்ரீமுஷ்ணம், ▶️ காட்டுமன்னார்கோயில், ▶️ விருத்தாசலம், ▶️ கடலூர், ▶️ வேப்பூர், ▶️ திட்டக்குடி, ▶️குறிஞ்சிப்பாடி, ▶️ புவனகிரி ஆகியவை ஆகும். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்கள்.

error: Content is protected !!