News April 13, 2025

நயினார்கோவில் நாகநாதர் கோயிலின் சிறப்பு

image

பரமக்குடி நயினார்கோவிலில் அமைந்துள்ளது நாகநாதர் கோயில். இங்கு மருதம், வில்வம் என 2 விருட்சங்கள் உள்ளன. பக்தர்கள் இந்த புற்றடியில் திருமணத் தடை, புத்திர பாக்கியம் இல்லாமை, நோய், வேலை கிடைக்காமை ஆகிய தங்களின் மனக் குறைகள் நீங்க பிரார்த்தித்து மஞ்சள் கயிறு கட்டுகிறார்கள்; இந்த புற்று மண்ணை எடுத்துச் சென்று நீரில் குழைத்து நோய் கண்ட இடங்களில் தடவ, பிணி தீர்வதாகவும் மக்கள் நம்புகிறார்கள்.*ஷேர் பண்ணுங்க

Similar News

News January 22, 2026

BREAKING ராம்நாடு: 3 நாட்களுக்கு குடிநீர் வராது

image

காவிரி கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் ராமநாதபுரம் சக்கரக்கோட்டை ரயில்வே தண்டவாளம் அருகே உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் கசிவை சரிசெய்யும் பணிக்காக வரும் 27, 28, 29 ஆகிய மூன்று நாட்களுக்கு கீழக்கரை, திருப்புல்லாணி ஒன்றியம், மண்டபம் பேரூராட்சி, ராமநாதபுரம், ராமேஸ்வரம் நகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு கூட்டுக் குடிநீர் அலுவலர் அறிவிப்பு. *ஷேர் பண்ணுங்க

News January 22, 2026

பரமக்குடி காவலருக்கு சர்வதேச சாதனையாளர் விருது

image

ராமநாதபுரம் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு, நுண்ணறிவுப்பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர் சுபாஷ் சீனிவாசன் என்பவர், இங்கிலாந்து நாட்டை சேர்ந்த லண்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சர்வதேச சாதனையாளர் உலக சாதனை புத்தகம் என்ற அமைப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சிறந்த பொது சேவை புரிந்தமைக்காக, சிறப்பு சேவை சுற்றுச்சூழல் பணிப்பெண் விருது வழங்கி பாராட்டினர்.

News January 22, 2026

ராம்நாடு : பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

image

இராமநாதபுரம் மக்களே, உங்க வீட்டில் பெண்குழந்தைகள் இருக்கா? முதலமைச்சரின் பெண்கள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 பெண் குழந்தை இருந்தால் 50,000/- மும், 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா 25,000/-மும் வழங்குகிறது. 18 வயது முடிந்த பின் வட்டியுடன் 3 லட்சமாக வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு <>க்ளிக்<<>> செய்யுங்க (அ) சமூக நல அலுவலரை அனுகுங்க. SHARE பண்ணுங்க.

error: Content is protected !!