News April 3, 2024
வெயிலில் மயங்கி விழுந்து பெண் உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டியில் வெயிலில் மயங்கி விழுந்து ஜோஸ்பின் மேரி (40) என்ற பெண் உயிரிழந்துள்ளார். இந்த ஆண்டுக்கான கோடை காலம் அதிக வெப்பத்துடன் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே எச்சரித்துள்ளது. குறிப்பாக திண்டுக்கல்லில் இன்று வெயில் 39 டிகிரிக்கு மேல் சுட்டெரித்தது. இந்த வெயிலில் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் வெளியே செல்லவும்.
Similar News
News November 2, 2025
பொய் பேசினால் மன்னிப்பு கிடையாது: தமன்னா

விஜய் வர்மா உடனான காதலை திடீரென முறித்துக் கொண்டார் தமன்னா. ஆனால் காரணத்தை கூறவில்லை. இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, யாராக இருந்தாலும் உறவுகளிடம் பொய் சொன்னால் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என தமன்னா பதிலளித்துள்ளார். பொய் பேசும் நபர்களை நான் ஒருபோதும் மன்னிக்க மாட்டேன் என்றும் அவர் கூறியுள்ளார். உங்கள் துணையிடம் நீங்கள் பொய் பேசுவீர்களா?
News November 2, 2025
EXCLUSIVE: அதிமுகவுடன் கூட்டணி.. முடிவை அறிவித்தார்

அதிமுக கூட்டணியில், 2026 பேரவைத் தேர்தலை சந்திக்க உள்ளதாக அனைத்து மக்கள் அரசியல் கட்சியின்(AMAK) தலைவர் ராஜேஸ்வரி பிரியா அறிவித்துள்ளார். WAY2NEWS-க்கு சிறப்பு பேட்டியளித்த அவர், 234 தொகுதிகளிலும் குறைந்தபட்சம் தலா 10,000 பேருடன் AMAK அபார வளர்ச்சி அடைந்துள்ளது என்றார். வரும் தேர்தலில் நாகை, மயிலாடுதுறை மாவட்டத்தில் ஏதேனும் ஒரு தொகுதி (அ) சென்னை மதுரவாயலில் தான் போட்டியிட விரும்புவதாக கூறினார்.
News November 2, 2025
என்ன சொல்றீங்க.. இறந்துடுமா?

சில உயிரினங்கள் வாழ்நாள் மிகவும் குறுகிய காலம் மட்டுமே. குறிப்பாக சில பூச்சி வகைகள், மீன்கள், எலி வகைகள் உள்ளிட்டவை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின் இறந்துவிடும். அவை எந்த உயிரினங்கள், எப்போது இறக்கும் என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதேபோன்று, உங்களுக்கு தெரிந்த உயிரினங்கள் தொடர்பான சுவாரசியமான தகவலை, கமெண்ட்ல சொல்லுங்க.


