News April 13, 2025

புதுச்சேரி தீயணைப்பு துறைக்கு வெடிகுண்டு மிரட்டல்

image

புதுவை கடற்கரை சாலையில் தீயணைப்பு துறை அலுவலகம் உள்ளது. இன்று தீயணைப்பு துறை அலுவலகத்திற்கு தொடர்ந்து பல முறை போன் வந்தது. அதில் பேசிய நபர் வெடிகுண்டு வைத்திருப்பதாக தெரிவித்தார். இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் அலுவலகம் முழுவதும் சோதனை செய்தனர். ஆனால் வெடிகுண்டு ஏதும் சிக்கவில்லை. பின்னர் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாயுடன் வந்து தீயணைப்பு நிலையத்தை சோதனை செய்தனர். இதனால் இன்று பரபரப்பு ஏற்பட்டது.

Similar News

News October 23, 2025

காரைக்கால்: சிறப்பு மருத்துவர்கள் வருகை

image

புதுவை இந்திரா காந்தி அரசு மருத்துவமனை மற்றும் பட்ட மேற்படிப்பு மையத்திலிருந்து சிறப்பு மருத்துவர்கள் காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு நாளை (24-10-25) வருகை தரவுள்ளனர். அங்கு காலை 9.30 முதல் 12 மணி வரை மருத்துவ சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் வழங்க உள்ளனர். இந்த வாய்ப்பினை காரைக்கால் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு காரைக்கால் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News October 23, 2025

புதுச்சேரி: ரூ.33,600 சம்பளத்தில் ஜிப்மரில் வேலை!

image

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் காலியாக உள்ள Project Technical Support-III பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு மாதம் ரூ.33,600 சம்பளம் வாங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் நாளை அக்டோபர் 24ம் தேதிக்குள் இந்த <>லிங்கில் <<>>விண்ணப்பித்தை பதிவிறக்கம் செய்து அதில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும். இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!

News October 23, 2025

புதுச்சேரி: அதிகாரிகள் நியமிக்க விண்ணப்பம் வரவேற்பு

image

கோரிமேடு ஜிப்மர் இயக்குனர் வீர்சிங் நெகி இன்று விடுத்துள்ள செய்திக்குறிப்பில், கோரிமேடு ஜிப்மர் மருத்துவமனையில் 66 உள்ளிருப்பு மருத்துவ அதிகாரிகள் பணியிடங்கள், 6 மாத காலம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இதற்கான நேர்முக தேர்வுக்கு விண்ணப்பிக்க, நவம்பர் 3ஆம் தேதி மாலை 4.30 மணிக்குள் ஆன்லைனில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!