News April 13, 2025
Health Tips: கிவி பழத்தில் இத்தனை நன்மைகளா?

வைட்டமின் சி அதிகமுள்ள கிவி பழம், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மற்ற பழங்களை விட இதில் குறைவான அளவே கலோரிகள் இருப்பதால், உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் விரும்பி சாப்பிடலாம். இதில் இருக்கும் பொட்டாசிய சத்துகள், இதய துடிப்பை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது. பெண்கள் எளிதாக கருவுறும் தன்மையையும் கிவி பழம் கொடுக்கிறது. சருமத்தை இளமையாக வைக்கவும் இது உதவும். SHARE IT.
Similar News
News January 26, 2026
ஏன் குடியரசு தினத்தில் கொடியை ஏற்றுவதில்லை?

இந்திய அரசியல் சட்டம் நடைமுறைக்கு வந்த தினத்தை நினைவுகூரும் நாளே குடியரசு தினம். நாடு ஏற்கெனவே விடுதலைப் பெற்றதால், <<18959128>>குடியரசு தினத்தில்<<>> கொடியை ஏற்றாமல் பறக்க விடுவார்கள். நாட்டின் முதற்குடிமகனான குடியரசுத்தலைவர்தான் கொடியை அவிழ்ப்பார். 1929-ல், இந்திய தேசிய காங்கிரஸ், பிரிட்டிஷ் ஆட்சியின் டொமினியன் அந்தஸ்தை எதிர்த்து சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்டதால், ஜனவரி 26 குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது.
News January 26, 2026
திருமாவளவன் முக்கிய ஆலோசனை!

விசிக மண்டலப் பொறுப்பாளர்கள் கூட்டம் திருமாவளவன் தலைமையில் இன்று நடைபெறுகிறது. இதில், தேர்தல் பணிகள், கூட்டணி, தொகுதிகள் நிலவரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளன. குறிப்பாக பாமக(ராமதாஸ்) திமுக கூட்டணியில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படும் நிலையில், தங்களது நிர்வாகிகளின் கருத்துகளை திருமாவளவன் தனித் தனியாக சந்தித்தும் கேட்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
News January 26, 2026
பன்முகத்தன்மையே நமது பலம்: CM ஸ்டாலின்

77-வது குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு CM ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது வாழ்த்துச் செய்தியில், நமது பலம் என்பது ஒற்றைத்தன்மை அல்ல பன்முகத்தன்மையே என்றும், அந்த பன்முகத்தன்மை காக்கப்படுவதே இந்தியாவை காக்கும் எனவும் கூறியுள்ளார். மேலும், சுயமரியாதை உணர்வுடன், நம்பிக்கையுடன், சுதந்திரத்துடன் வாழும் போது ஒட்டுமொத்த இந்தியாவும் ஒருசேர உயர்கிறது என்று கூறியுள்ளார்.


