News April 13, 2025

சேலத்தில் 25,000 பக்தர்களுக்கு இலவசமாக லட்டு வழங்க ஏற்பாடு

image

சேலம் குரங்குச்சாவடியில் அமைந்துள்ள பிரசித்திப் பெற்ற ஐயப்ப ஆசிரமத்தில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நாளை (ஏப்.14) அதிகாலை 04.00 மணிக்கு நடைத் திறக்கப்பட்டு மஹா கணபதி ஹோமத்துடன் கோயில் முழுவதும் காய்கனிகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதில் ஐயப்பன் பாதத்தில் வைத்து பூஜைச் செய்யப்பட்ட ஒரு ரூபாய் நாணயம் மற்றும் லட்டு சுமார் 25,000 பக்தர்களுக்கு இலவசமாக வழங்க ஏற்பாடு.

Similar News

News December 18, 2025

வாழப்பாடி விபத்தில் பவுன்சர் பலி – தோழி கவலைக்கிடம்!

image

கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த விமல்ராஜ்(23), பவுன்சராக பணியாற்றி வருகிறார். அவரது தோழி சிவகங்கை பகுதியைச் சேர்ந்த கலையரசி(30). இருவரும் டூவீலரில் சேலம் நோக்கி இன்று காலை சென்றனர். வாழப்பாடி அடுத்த மின்னாம்பள்ளி அருகே சென்றபோது டூவீலர் தேசிய நெடுஞ்சாலை தடுப்புச் சுவரின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் விமல்ராஜ் உயிரிழந்தார். கலையரசி சிகிச்சை பெற்று வருகிறார். காரிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

News December 18, 2025

அறிவித்தார் சேலம் கலெக்டர்!

image

சேலம் மாவட்ட குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் செயல்படும் மாவட்ட குழந்தைகள் உதவி மையத்தில் வழக்குப் பணியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் இணையத்தில் https://salem.nic.in வெளியிடப்பட்டது. 42 வயதுக்குட்பட்ட பிளஸ்-டூ படித்தவர்கள் வருகின்ற டிச.31ம் தேதிக்குள் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார்.

News December 18, 2025

சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்!

image

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.

error: Content is protected !!