News April 13, 2025
பிரபல நடிகர் கலைப்புலி ஜி.சேகரன் காலமானார்

பிரபல நடிகரும், இயக்குநருமான கலைப்புலி ஜி.சேகரன் (73) உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன், உளவாளி, ஜமீன் கோட்டை உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர், 2000-ல் திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்தின் தலைவரான பிறகு சினிமாவில் விநியோகஸ்தர்களின் குரலை ஓங்கச் செய்தவர். ஜி.சேகரன் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Similar News
News November 3, 2025
டிரம்ப் நிர்வாகத்தின் அடுத்த அடி.. EX RBI கவர்னர் வார்னிங்

டிரம்ப் நிர்வாகம் முன்மொழிந்துள்ள HIRE சட்டத்தால் இந்தியா கடுமையான பாதிப்புகளை சந்திக்கும் என முன்னாள் RBI கவர்னர் ரகுராம் ராஜன் எச்சரித்துள்ளார். இந்தியா உள்பட வெளிநாடுகளில் இருந்து அவுட்சோர்ஸிங் முறையில் பெறப்படும் சேவைகளுக்கு 25% வரிவிதிக்க டிரம்ப் அரசாங்கம் முன்மொழிந்துள்ளது. இதனால், இந்தியாவின் IT, BPO உள்ளிட்ட சேவை துறைகள் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் கவலை எழுப்பியுள்ளார்.
News November 3, 2025
வங்கக் கடலில் அதிக புயல்கள் உருவாவது ஏன்?

1990-2020 வரை அரபிக் கடலில் 73 புயல்களும், வங்கக் கடலில் 190 புயல்களும் உருவாகியுள்ளன ➤வங்க கடலின் நீர் மிகவும் சூடாக இருப்பதால் புயல் உருவாக தேவையான ஆற்றலை அது அளிக்கிறது ➤இப்பகுதியில் காற்றின் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் மேகங்கள் வேகமாக உருவாகின்றன ➤காற்றின் திசை & வேகம் புயல் சுழல ஏதுவாக இருக்கிறது ➤வங்கக்கடல் வடிவம் சுழல்களை நிலப்பரப்பு நோக்கி தள்ளி அதன் வலிமையை அதிகரிக்கிறது. SHARE.
News November 3, 2025
விஜய்யின் கூட்டணி கணக்குதான் என்ன?

பாஜக வீசும் கூட்டணி வலையில் சிக்காமல் இருக்க சுறா போல எதிர்நீச்சல் போடுகிறாராம் விஜய். அதாவது, பாதிக்குப் பாதி சீட், கேட்கும் தொகுதிகளை கொடுக்கவேண்டும், CM வேட்பாளர் குறித்து தற்போதைக்கு அறிவிக்கக்கூடாது என பல டிமாண்டுகளை விஜய் அடுக்குகிறாராம். இதனால், விஜய்யை எப்படி கூட்டணிக்குள் இழுப்பது என தெரியாமல் காவி புள்ளிகள் தலைசுற்றிபோய் இருப்பதாக கூறப்படுகிறது.


