News April 13, 2025
புதிய உத்வேகம் பிறக்கட்டும்: இபிஎஸ் புத்தாண்டு வாழ்த்து

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். புதிய ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஒவ்வொரு தமிழரின் உள்ளத்திலும் புதிய சிந்தனைகள், புதிய முயற்சிகள், புதிய நம்பிக்கையோடு கூடிய புதிய உத்வேகம் பிறக்கட்டும் என வாழ்த்தியுள்ளார். ‘விசுவாவசு’ ஆண்டில் மக்களின் வாழ்வில் மகிழ்ச்சியும், புன்னகையும் பூக்கட்டும் என மனதார வாழ்த்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News November 8, 2025
மருத்துவ துறையின் லெஜண்ட் காலமானார்

DNA-வின் இரட்டைச் சுருள் வடிவமைப்பை கண்டறிந்தவர்களில் ஒருவரும், நோபல் பரிசு பெற்றவருமான ஜேம்ஸ் வாட்சன் (97) காலமானார். நவீன உயிரியலில் பெரும் வளர்ச்சிக்கு வழிவகுத்த அந்தக் கண்டுபிடிப்பால், உடலில் மரபணு எப்படி வேலை செய்கிறது என்பதைக் கண்டறிய முடிந்தது. இதனால், மருத்துவம், தடயவியல் போன்ற துறைகளில் கூடுதல் தொழில்நுட்பத்தைக் கொண்டுவர முடிந்தது. அவரது மறைவுக்கு பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
News November 8, 2025
தஞ்சை பல்கலை.,யில் ஆந்திர மாணவன் விபரீத முடிவு!

தஞ்சாவூரில் உள்ள சாஸ்த்ரா பல்கலை.,யில் ஆந்திராவை சேர்ந்த பி.டெக் மாணவன் அபினவ், 4-வது மாடியிலிருந்து குதித்ததால் உயிருக்கு ஆபத்தான நிலையில், ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வருகிறார். முதல்கட்ட விசாரணையில், வகுப்பறையில் செல்போன் பயன்படுத்தியதை பேராசிரியர் கண்டித்ததால், அபினவ் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளது தெரியவந்துள்ளது.
News November 8, 2025
நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

SIR விவகாரம் தொடர்பாக CM ஸ்டாலின் தலைமையில் நாளை(நவ.9) திமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. காலை 10 மணிக்கு காணொலி வாயிலாக நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் MP-க்கள், MLA-க்களும் பங்கேற்க வேண்டும் என துரைமுருகன் அறிவுறுத்தியுள்ளார். ஏற்கெனவே, SIR நடவடிக்கைகளுக்கு எதிராக திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகள் சார்பில் வரும் 11-ம் தேதி போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.


