News April 13, 2025
NIA-விடம் ராணா கேட்ட 3 பொருட்கள்

NIA கஸ்டடியில் இருக்கும் தீவிரவாதி ராணா, இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆன், ஒரு பேனா மற்றும் சில பேப்பர்களை கேட்டதாக அதிகாரிகள் தரப்பில் இருந்து தெரியவந்துள்ளது. ராணா கோரிய 3 பொருட்களும் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதை தவிர்த்து வேறு எந்த பொருளையும் அவர் கேட்கவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், ராணா 5 முறை தொழுகை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.
Similar News
News October 31, 2025
முக்குலத்தோருக்கு தனி இட ஒதுக்கீடு வழங்குக: GK மணி

தென்தமிழகத்தை மையமாக கொண்டு வாழக்கூடிய முக்குலத்தோர் மக்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று ராமதாஸ் தரப்பில் உள்ள GK மணி வேண்டுகோள் விடுத்துள்ளார். அதுமட்டுமின்றி, தமிழகத்தில் உள்ள அனைத்து சமுதாய மக்களுக்கும் தனித்தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். அதேபோல், வன்னியருக்கு 15% ஒதுக்கீட்டை பாமக தலைவர் அன்புமணி கோரி வருவதும் குறிப்பிடத்தக்கது.
News October 31, 2025
காலை கடன் கழிப்பதில் சிரமமா? ஒரே நாளில் தீர்வு

மலச்சிக்கல் பிரச்னையால் அவதிப்படுறீங்களா? கவலையவிடுங்க. நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் ஆகிய மூன்றும் சேர்ந்த திரிபலா தூள் இதற்கு தீர்வாக அமையும். 1 டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 1 ஸ்பூன் இந்த பொடியை சேர்த்து தேன் கலந்து குடியுங்கள். இதனை படுக்கைக்கு செல்வதற்கு முன்பு (அ) அதிகாலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் பிரச்னை தீரும். பலருக்கும் பயனளிக்கும் தகவலை SHARE பண்ணுங்க.
News October 31, 2025
பள்ளிகளுக்கு அடுத்த வாரமும் விடுமுறையா?

நவம்பர், டிசம்பர் மாதம் என்றாலே மழை விடுமுறை எப்போது வரும் என்று மாணவர்கள் குஷியாகி விடுவார்கள். இந்நிலையில், நவம்பர் முதல் நாளான நாளை அந்தமான் & அதனையொட்டிய பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக IMD தெரிவித்துள்ளது. இது புயலாக மாறுமா என்பது இன்னும் உறுதியாகவில்லை. ஒருவேளை புயல் உறுதியானால், இந்த வாரம் போன்றே அடுத்த வாரமும் விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


