News April 13, 2025
ரவுடி வரிச்சூர் செல்வத்தை சுட்டுப் பிடிக்க உத்தரவு

மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடி வரிச்சூர் செல்வத்தை சுட்டுப் பிடிக்க உத்தரவிடப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கோயம்புத்தூர் கட்டப்பஞ்சாயத்திற்காக ஆயுதங்களுடன் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் காவலர்கள் சம்பந்தப்பட்ட இடத்தில் சோதனை நடத்தி வருகின்றனர்.தேவைப்பட்டால் காலில் சுட்டு பிடிக்க காவல் துறையினருக்கு உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
Similar News
News November 2, 2025
மதுரை: ஊராட்சியில் வேலை.. APPLY செய்வது எப்படி?

மதுரை மாவட்டத்தில் 69 கிராம ஊராட்சி செயலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 10th படித்த 18 வயது நிரம்பியவர்கள் முதலில் <
News November 2, 2025
மதுரை: அறுவை சிகிச்சையால் பாதிப்பு.. ரூ.10 லட்சம் இழப்பீடு

மதுரையை சேர்ந்த செந்தமிழ் செல்வன் மதுரை நுகர்வோர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதில், அறுவை சிகிச்சையின் போது, அலட்சியத்தால் நிரந்தர நோயாளியாக மாற்றப்பட்டுள்ளதாக இழப்பீடு கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த நீதிபதிகள் மருத்துவரின் அலட்சியத்தால் மனுதாரர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார் அவருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடும் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தனர்.
News November 2, 2025
மதுரை: வைகை கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!

வைகை அணையில் இருந்து சிவகங்கை மாவட்ட பாசனத்திற்காக வினாடிக்கு 2 ஆயிரம் க.அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மொத்தம் 5 நாட்களுக்கு அணையில் உள்ள 7 சிறிய மதகுகள் வழியாக 772 மி. க.அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த நீர் திறப்பால் தேனி, மதுரை, சிவகங்கை மாவட்ட வைகை கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


