News April 13, 2025
திருச்சியில் 50க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினர் கைது

தமிழ்நாடு முழுவதும் வக்ஃபு வாரிய திருத்த சட்ட மசோதாவை எதிர்த்து நாம் தமிழர் கட்சி சார்பாக மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஒரு பகுதியாக இன்று திருச்சி மாநகர் பாலக்கரை பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக மாவட்ட செயலாளர் ரஞ்சித் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.
Similar News
News April 16, 2025
ஸ்ரீரங்கத்தில் நாளை சித்திரை திருவிழா கொடியேற்றம்

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றம் நாளை (17.04.25) நடைபெற உள்ளது. இதனையொட்டி நம்பெருமாள் அதிகாலை 3 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு கொடியேற்ற மண்டபம் வந்தடைகிறார். அதனைத் தொடர்ந்து காலை 4:30 மணி முதல் 5:30 மணிக்குள் மீன லக்னத்தில் கொடியேற்றம் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
News April 16, 2025
திருச்சியில் ரூ.45,000 சம்பளத்தில் அரசு வேலை!

மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தில் திருச்சி மாவட்டத்தில் காலியாக உள்ள குறைதீர்ப்பாளர் பணியிடத்திற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு சம்பளமாக மாதம் ரூ.45,000 வரை வழங்கப்படும். ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் tnrd.tn.gov.in வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 05.05.2025 ஆகும். அரசு வேலை தேடும் உங்க நண்பருக்கு இதை SHARE செய்யவும்.
News April 16, 2025
என்.எல்.சியில் 171 காலிப்பணியிடங்கள்

NLC நிறுவனத்தில் Junior Overman & Mining Sirdar பணிகளுக்கு 171 காலிப் பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவித்துள்ளனர். டிப்ளமோ, இன்ஜினியரிங் படித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Junior Overman பணிக்கு ஆண்டுக்கு ரூ. 8.53 லட்சமும், Mining Sirdar பணிக்கு ஆண்டுக்கு ரூ. 7.16 லட்சம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர். மேலும் அறிய <