News April 13, 2025
நீங்களும் Phone பின்னாடி பணம் வைக்கிறீங்களா..?

அப்படினா போன் வெடிக்கும் வாய்ப்புகள் அதிகம். அட ஆமாங்க! ரூபாய் நோட்டுகளில் Calcium Carbonate இருக்கிறது. இதனை, பட்டாசுகளிலும் பயன்படுத்துவார்கள். காலை எழுந்ததில் இருந்து நைட் தூங்கும் வரைக்கும், போனே கதி என இருப்பதால், போன் அதிக ஹீட்டாகும். அந்த நேரத்தில், ரூபாய் நோட்டு இருந்தால், போன் தீப்பிடித்து எரியலாம். ஏன் போனேக்கூட சில நேரங்களில் வெடித்து விடலாம். கொஞ்சம் கவனமா இருங்க..!
Similar News
News April 25, 2025
100% தேர்ச்சி.. பள்ளிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்

10,12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் 100% தேர்ச்சி பெறும் அரசுப்பள்ளிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்தார். பள்ளி கல்வித்துறை தொடர்பான அறிவிப்பில் அரசுப் பள்ளிகளில் பயின்று சாதனை புரிந்த மாணவர்கள் அவர்கள் பயின்ற பள்ளியின் தூதுவர்களாக நியமிக்கப்படுவார்கள் என தெரிவித்தார்.
News April 25, 2025
காப்புரிமை மீறல்.. ₹2 கோடி செலுத்த ரஹ்மானுக்கு உத்தரவு

பொன்னியின் செல்வனில் இடம்பெற்ற ‘வீரா ராஜா வீரா’ பாடல் ‘சிவ ஸ்துதி’ என்கிற பாடலை காப்பி அடித்து இசையமைக்கப்பட்டதாக கூறி ஃபயாஸ் வாசிபுதீன் தாகர் என்பவர் வழக்குத் தொடர்ந்தார். வழக்கின் விசாரணையின் போது ‘வீரா ராஜா வீரா’ பாடல் தனது அசல் படைப்பு என ரஹ்மான் தரப்பில் வாதிடப்பட்டது. எனினும் வழக்கில் முகாந்திரம் உள்ளதால் ₹2 கோடியை நீதிமன்ற பதிவாளரிடம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
News April 25, 2025
சாகும் வரை காத்திருந்த தீவிரவாதி

தனது கணவரை சுட்டுவிட்டு, அவர் சாகும் வரை காத்திருந்து, பின்னரே தீவிரவாதி அங்கிருந்து சென்றதாக பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்ட ம.பி.யைச் சேர்ந்த சைலேஷின் மனைவி ஷீதல் தெரிவித்துள்ளார். தீவிரவாதிகள் சென்ற பிறகும் கூட தங்களுக்கு உடனடி உதவி கிடைக்கவில்லை எனவும், சிறிது நேரம் கழித்து அங்கு வந்த ராணுவ வீரரிடம் இது பற்றி சொன்னபோது, ஏன் இங்கு வந்தீர்கள் என அவர் கடிந்து கொண்டதாகவும் ஷீதல் கூறியுள்ளார்.