News April 13, 2025
நெல்லை மாவட்ட மழை அளவு வெளியானது

நெல்லை மாவட்டத்தில் கடந்த சில வாரமாக தொடர்ச்சியாக கோடை மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் நெல்லை மாவட்டத்தில் பதிவான மழை அளவு வெளியிடப்பட்டுள்ளது. அதில் அதிகபட்சம் சேர்வலாறு அணை பகுதியில் 5 மி.மீட்டர் மலையும் பாபநாசம் மற்றும் கன்னடியன் கால்வாய் பகுதியில் இரண்டு மி.மீ. மழையும் பதிவாகி இருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Similar News
News August 27, 2025
நெல்லை: உங்க நிலத்தை காணமா??

நெல்லை மக்களே நீங்கள் வாங்கிய நிலங்கள் (அ) உங்க தாத்தா மற்றும் அப்பா வாங்கிய பழைய நிலங்களின் பத்திரம் இருக்கு ஆனா நிலம் எங்க இருக்கன்னு தெரியலையா? சர்வேயர்க்கு காசு கொடுக்கனுமான்னு யோசீக்கிறீங்களா?? உங்க நிலங்களை கண்டுபிடிக்க EASYயான வழி. இங்க <
News August 27, 2025
நெல்லையில் நகையை விழுங்கிய ஊழியர்

வி.கே.புரத்தை சேர்ந்தவர் சுப்பம்மாள்(70). இவர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு நெல்லை, கொக்கிரகுளம் பகுதி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இவர் அணிந்திருந்த 3 பவுன் நகையை ஆஸ்பத்திரி ஊழியர் ராமர் (25) திருடினார். உடனே சுப்பம்மாள் சத்தம் போடவே என்ன செயவதென்று தெரியாமல் நகையை விழுங்கியுள்ளார். ஆஸ்பத்திரியில் ராமருக்கு இனிமா மருந்து கொடுத்து நகை வெளியில் எடுக்கப்பட்டது. இதுக்குறித்து பாளை போலீசார் விசாரணை.
News August 27, 2025
டாஸ்மாக் பாரில் 17 ஆயிரம் பணம் கொள்ளை

மேலப்பாளையத்தை அடுத்த கருங்குளம் பகுதியில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையின் அருகிலேயே டாஸ்மாக் பார் இயங்கி வருகிறது.நேற்று இரவு கடையில் விற்பனை முடிவடைந்த நிலையில் அங்கு பணியாற்றிய ஊழியர்கள் பாரை பூட்டி விட்டு சென்றனர். இன்று காலை வழக்கம் போல் பாரை திறப்பதற்கு ஊழியர்கள் சென்ற போது கதவு உடைக்கப்பட்டு 17,000 ரொக்க பணம் கொள்ளை போயிருந்தது. இதுக்குறித்து மேலப்பாளையம் போலீசார் விசாரணை.