News April 13, 2025
திமுக அதிர்ச்சியடைந்துவிட்டது: ஆர்.பி.உதயகுமார்

அதிமுக – பாஜக கூட்டணியை விமர்சித்தால் தமிழகம் முழுவதும் போராட்டம் வெடிக்கும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிவித்துள்ளார். பாஜகவுடன் மீண்டும் கூட்டணி அமைத்ததை கண்டு திமுகவினர் நடுங்கி போயிருப்பதாக அவர் விமர்சித்துள்ளார். ஆட்சியை தொடரலாம் என்ற கனவு கண்டிருந்த ஸ்டாலினுக்கு தலையில் இடி விழுந்தது போல ஆகிவிட்டது என்றும் கூறியுள்ளார்.
Similar News
News July 4, 2025
FLASH: தூத்துக்குடியில் 7-ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி வரும் திங்கள்கிழமை(ஜூலை 7) தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் அந்த மாவட்டத்தில் உள்ள மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்கள் இயங்காது. குடமுழுக்கு விழாவையொட்டி மாநிலம் முழுவதும் இருந்து பக்தர்கள் வருகை அதிகரிக்கும் என்பதால் TNSTC சிறப்புப் பஸ்களை அறிவித்துள்ளது கவனிக்கத்தக்கது.
News July 4, 2025
இந்த ரேஷன் கார்டுகள் செல்லாது?

ஜூன் 30-க்குள் கை விரல் ரேகை பதியாத ரேஷன் அட்டைகள் செல்லாது என்ற செய்தி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக, ரேஷன் உதவிகள் கிடைக்க KYC சரி பார்ப்பது அவசியம் என்றும் ஆதார், மொபைல் எண், கைரேகை, இறந்தவர்கள் பெயர் நீக்கம் போன்றவற்றை அப்டேட் செய்யாவிட்டால் ரேஷன் கார்டு செல்லாது என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், இது தவறான செய்தி, மக்கள் நம்ப வேண்டாம் என TN Fact Check விளக்கமளித்துள்ளது.
News July 4, 2025
2026ல் மதுரையில் போட்டியிடும் விஜய்?

ஆகஸ்டில் 2வது மாநில மாநாட்டை நடத்த தவெக செயற்குழுவில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்த மாநாட்டை மதுரையில் நடத்த பெரும்பான்மையான நிர்வாகிகள் சம்மதம் தெரிவித்துள்ளனர். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் மதுரையில் விஜய் களமிறங்க வாய்ப்புள்ளதாக முன்னதாக பேச்சு அடிப்பட்டது. தற்போது மதுரையில் மாநில மாநாட்டை நடத்துவதன் மூலம், அவர் அங்கு களமிறங்குவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.