News April 13, 2025
பெண்களுக்கு ரூ.50,000 நிதியுதவி

மத்திய அரசின் உணவு தன்னிறைவு திட்டமான அன்னப்பூர்ணா திட்டத்தின் கீழ், பெண்களுக்காக அன்னபூர்ணா என்ற திட்டத்தை SBI வங்கி செயல்படுத்தி வருகிறது. புதிதாக கேட்டரிங், பேக்கரி தொழில் தொடங்க விருப்பம் உள்ள பெண்கள் இந்த திட்டத்தின்கீழ் கடன் பெறலாம். இதற்கு எந்தவித பிணயமும் தேவையில்லை. இதுகுறித்த முழு தகவலை உங்கள் ஊரில் உள்ள SBI வங்கி கிளைக்கு சென்று தெரிந்து கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க
Similar News
News April 16, 2025
வேலூர் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் தகவல்

வேலூர் மாவட்டத்தில் ஏப்ரல் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் வரும் ஏப்ரல் 25-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமையில் அனைத்து துறை அரசு அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். எனவே வேலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை தெரிவித்து பயனடையுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News April 16, 2025
வேலூர் சிறையும் சுதந்திர போராட்டமும்

ஆங்கிலேயர் காலத்தில் அந்தமான் சிறைக்கு அடுத்தபடியாக கொடிய சிறையாக வேலூர் சிறை இருந்தது. 1830ல் தொடங்கப்பட்ட இங்கு விடுதலைப் போரில் பங்கெடுத்த வினோபாபாவே, இராஜாஜி, கர்மவீரர் காமராஜர் போன்ற தலைவர்களும், முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவும் சிறை வாசத்தை அனுபவித்தனர். விடுதலை போராட்டதிலிருந்து இன்று வரை செயல்பட்டு வரும் இந்த சிறை தற்போது புழல் சிறைக்கு அடுத்ததாக பார்க்கப்படுகிறது. ஷேர் பண்ணுங்க
News April 16, 2025
வேலூர்: பிளஸ்-1 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி

வேலூர் மாவட்டத்தில் நேற்று முதல் பிளஸ் 1 வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி வேலூர் சாய்நாதபுரம் கிருஷ்ணசாமி அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி மற்றும் குடியாத்தம் சேத்துவண்டை சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக்பள்ளியில் தொடங்கியது. இதில் முதன்மை தேர்வாளர்கள் மற்றும் கூர்ந்தாய்வாளர்கள் ஆகியோர் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுகின்றனர் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.