News April 13, 2025
பிரபல நடிகரை 2வது திருமணம் செய்யும் நடிகை மேகனா ராஜ்?

பிரபல நடிகை மேகனா ராஜ் நடிகர் விஜய் ராகவேந்திராவை 2வது திருமணம் செய்யவுள்ளதாக தகவல் ஒன்று வெளிவந்தது. ஆனால், அதில் உண்மையில்லை என இருவருமே மறுத்து விட்டனர். மேகனாவின் கணவர் சிரஞ்சீவி சர்ஜா, கடந்த 2020ல் உயிரிழந்ததை தொடர்ந்து, அவர் தனது குழந்தைகளை வளர்ப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் தமிழில் காதல் சொல்ல வந்தேன், உயர்திரு 430 போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
Similar News
News November 4, 2025
அடுத்த தலைவர் கலகத்தை தொடங்கினார்.. பரபரப்பு!

தமிழ்நாடு காங்கிரஸில் பெண்களுக்கு மரியாதை இல்லை என மகிளா காங்கிரஸ் தலைவர் ஹசீனா சையத் அடுத்த கலகத்தை தொடங்கியுள்ளார். தனியார் நாளிதழுக்கு பேட்டியளித்த அவர், வாரிசு அரசியலை ஓரங்கட்டிவிட்டு, உழைக்கும் மகளிருக்கு தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய தேசிய தலைமையை வலியுறுத்துவேன் எனவும் கூறியுள்ளார். நடிகை குஷ்பு, விஜயதரணி ஆகியோரும் இதே குற்றச்சாட்டை முன்வைத்து கட்சியில் இருந்து விலகியது கவனிக்கத்தக்கது.
News November 4, 2025
டாப் 7 பணக்கார இந்திய கிரிக்கெட் வீராங்கனைகள்

மகளிர் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ஐசிசியின் பரிசுத் தொகையான ₹39.78 கோடியுடன் பிசிசிஐ அறிவித்துள்ள சிறப்பு தொகையான ₹51 கோடியும் சேர்த்து மொத்தம் ₹90 கோடி கிடைக்கப்போகிறது. இந்நிலையில், டாப்-7 பணக்கார இந்திய வீராங்கனைகளின் விவரங்களை போட்டோக்களாக கொடுத்துள்ளோம். அவற்றை SWIPE செய்து பார்க்கவும்.
News November 4, 2025
காலையில் எழுந்தவுடன் முதலில் செய்ய வேண்டியவை!

காலையில் எழுந்தவுடன் பின்பற்றும் சில பழக்கங்கள், அன்றைய நாள் முழுவதும் நம் மனநிலையில் நேர்மறையான தாக்கத்தை நிச்சயம் ஏற்படுத்தும். காலை பொழுதில் செய்ய வேண்டிய சில முக்கிய விஷயங்களை இங்கே போட்டோக்களாக பட்டியலிட்டுள்ளோம். அவற்றை SWIPE செய்து பார்க்கவும்.


