News April 13, 2025

கொலை வழக்கில் இருவர் குண்டர் சட்டத்தில் கைது

image

காஞ்சிபுரம் திருக்காலிமேடு பகுதியில், கடந்த மாதம் 11ம் தேதி, ரவுடி வசூல் ராஜா 34, என்பவர், வெட்டி கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில், 11 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் ரவுடி தியாகுவை போலீசார் தேடி வருகின்றனர். இவ்வழக்கில், கைது செய்யப்பட்ட சுரேஷ்(19) மற்றும் ஜாகீர்உசேன்(25) ஆகிய இருவரையும், எஸ்.பி.,சண்முகம், பரிந்துரை படி, கலெக்டர் கலைச்செல்வி, குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

Similar News

News April 16, 2025

காஞ்சிபுரத்தில் அன்னம்மாள் கேட்டரிங் கல்லூரியில் மோசடி

image

அன்னம்மாள் கேட்டரிங் கல்லூரியில் கடந்த வாரம் HOD சாமுஸ்ரீ மற்றும் அலுவலர் சத்தியகலா ஆகியோர் நீக்கம் செய்யப்பட்டனர். இதையடுத்து பயிலும் மாணவர்கள் கட்டணம் சரியாக செலுத்தவில்லை என கல்லூரி நிர்வாகம் கூறியதை கேட்டு மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனை தொடர்ந்து 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிவகாஞ்சி காவல் நிலையத்தில் குவிந்து, HOD சாமுஸ்ரீ கட்டணத்தை வசூலித்து விட்டு ஏமாற்றிவிட்டதாக புகாரளித்துள்ளனர்.

News April 16, 2025

ஜாக்கிரதை! ஒரு க்ளிக் உங்கள் வாழ்க்கையை மாற்றலாம்!

image

அறிமுகம் இல்லாத எண்களில் இருந்து வரும் குறுஞ்செய்திகளை நம்பி, அவற்றில் உள்ள எந்தவொரு இணையதள இணைப்பையும் (லிங்க்) கிளிக் செய்ய வேண்டாம். அவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கி சார்ந்த தகவல்கள் திருடப்படும் அபாயம் உள்ளது. சைபர் குற்றங்கள் குறித்து புகார் அளிக்க, 1930 என்ற எண்ணை அழையுங்கள். இது குறித்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்

News April 16, 2025

காஞ்சிபுரத்தில் நாளை மின் குறைதீர் கூட்டம்

image

காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் உள்ள மின் வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில், நாளை (ஏப்ரல்.17) காலை 11:00 மணிக்கு குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், மின் நுகர்வோர் பங்கேற்று தங்களின் குறைகளை தெரிவிக்கலாம் என காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

error: Content is protected !!