News April 13, 2025

பாஜக மாநிலத் தலைவர் கடந்து வந்த பாதை

image

பாஜக மாநிலத் தலைவராக நெல்லை சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நயினார் நாகேந்திரன் நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள தண்டையார்குளத்தை சேர்ந்தவர், இவர் 1989-ல் அதிமுகவில் சேர்ந்து பணகுடி நகர செயலாளரானார். 2001ல் அதிமுக ஆட்சியில் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை, தொழில் துறை அமைச்சராக பணியாற்றினார். 2017-ல் பாஜகவில் இணைந்தார். தற்போது நெல்லை எம்எல்ஏவாக உள்ளார்.

Similar News

News August 27, 2025

நெல்லை: உங்க நிலத்தை காணமா??

image

நெல்லை மக்களே நீங்கள் வாங்கிய நிலங்கள் (அ) உங்க தாத்தா மற்றும் அப்பா வாங்கிய பழைய நிலங்களின் பத்திரம் இருக்கு ஆனா நிலம் எங்க இருக்கன்னு தெரியலையா? சர்வேயர்க்கு காசு கொடுக்கனுமான்னு யோசீக்கிறீங்களா?? உங்க நிலங்களை கண்டுபிடிக்க EASYயான வழி. இங்க <>க்ளிக்<<>> பண்ணி LOGIN செய்து நெல்லை மாவட்டம், பத்திர எண், சர்வே எண் மற்றும் சப்டிவிஷன் எண்ணை பதிவிட்டு உங்க இடத்தை பைசா செலவில்லாமல் கண்டுபிடியுங்க… SHARE பண்ணுங்க..

News August 27, 2025

நெல்லையில் நகையை விழுங்கிய ஊழியர்

image

வி.கே.புரத்தை சேர்ந்தவர் சுப்பம்மாள்(70). இவர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு நெல்லை, கொக்கிரகுளம் பகுதி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இவர் அணிந்திருந்த 3 பவுன் நகையை ஆஸ்பத்திரி ஊழியர் ராமர் (25) திருடினார். உடனே சுப்பம்மாள் சத்தம் போடவே என்ன செயவதென்று தெரியாமல் நகையை விழுங்கியுள்ளார். ஆஸ்பத்திரியில் ராமருக்கு இனிமா மருந்து கொடுத்து நகை வெளியில் எடுக்கப்பட்டது. இதுக்குறித்து பாளை போலீசார் விசாரணை.

News August 27, 2025

டாஸ்மாக் பாரில் 17 ஆயிரம் பணம் கொள்ளை

image

மேலப்பாளையத்தை அடுத்த கருங்குளம் பகுதியில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையின் அருகிலேயே டாஸ்மாக் பார் இயங்கி வருகிறது.நேற்று இரவு கடையில் விற்பனை முடிவடைந்த நிலையில் அங்கு பணியாற்றிய ஊழியர்கள் பாரை பூட்டி விட்டு சென்றனர். இன்று காலை வழக்கம் போல் பாரை திறப்பதற்கு ஊழியர்கள் சென்ற போது கதவு உடைக்கப்பட்டு 17,000 ரொக்க பணம் கொள்ளை போயிருந்தது. இதுக்குறித்து மேலப்பாளையம் போலீசார் விசாரணை.

error: Content is protected !!