News April 13, 2025
கவர்னர் ஆர்.என்.ரவிக்கு கி.வீரமணி கண்டனம்!

கவர்னர் ஆர்.என்.ரவியை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என திக தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார். மதுரையில் தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்ற கவர்னர் மாணவர்களை ஜெய் ஸ்ரீ ராம் என முழக்கமிட வைத்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டித்துள்ள கி.வீரமணி, மதச்சார்பின்மைக்கு எதிராக கவர்னர் நடந்து கொள்வதாகவும், மாணவர்களிடம் மதவெறியை தூண்ட முயற்சிக்கிறார் எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.
Similar News
News August 21, 2025
விஜய்யின் கொள்கை சரியில்லை : சீமான் அட்டாக்

விஜய்யின் கொள்கை, கோட்பாடு ஏற்புடையதல்ல என சீமான் விமர்சித்துள்ளார். தவெக மாநாட்டில் அண்ணாவின் புகைப்படத்தை வைத்துவிட்டு, திமுகவை எதிரியாக விஜய் குறிப்பிடுவது ஏன் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இந்த மாநாட்டில் எம்ஜிஆர் படம், அடுத்த மாநாட்டில் ஜெயலலிதா, EPS படம் வைப்பீர்களா என்றும் அவர் விஜய்யை சாடியுள்ளார். சீமான் கேள்வி குறித்து உங்கள் கருத்து என்ன? கமெண்ட் பண்ணுங்க.
News August 21, 2025
முதல்முறையாக இந்தியா வரும் ஃபிஜி PM

ஃபிஜி நாட்டின் PM சிடிவேனி லிகமமடா ரபுகா, முதல்முறையாக ஆக.24-ல் இந்தியா வருகிறார். ஆக.26 வரை இங்கு இருக்கும் அவர், ஜனாதிபதி முர்மு, PM மோடியைச் சந்திக்கிறார். அப்போது இரு நாடுகளுக்கு இடையே 3 முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளன. மேலும் டெல்லியில் உள்ள உலக விவகாரங்களுக்கான இந்திய கவுன்சிலில் ‘அமைதி பெருங்கடல்’ (Ocean of peace) என்ற தலைப்பில் உரையாற்றவுள்ளார்.
News August 21, 2025
பொது அறிவு வினா- விடை பதில்கள்!

காலை 11 மணிக்கு கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள். கேள்விக்கு <<17471264>>இங்கே <<>>கிளிக் செய்யவும்.
1. சுகுமார் சென்.
2. 1608.
3. திருமூலர்.
4. தமிழ்.
5. வெறுங்கை அல்லது வெறுங்கயுடன் விளையாடுதல்.
எத்தனை கேள்விக்கு சரியாக பதில் சொன்னீங்க.