News April 13, 2025

காசநோய் ஒழிப்புத் திட்டத்தின்கீழ் பணியாற்ற அழைப்பு

image

நாமக்கல் மாவட்டத்தில் காசநோய் சுகாதார பார்வையாளர் பணியிடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இதற்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.13,300 வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி (மோகனூர் சாலை) அல்லது 04286 – 292025 என்ற எண்ணை அழைக்கவும். இதை ஷேர் செய்யுங்கள்.

Similar News

News November 9, 2025

காவலர் தேர்வு எழுதுபவர்களுக்கு காவல் கண்காணிப்பாளர் வாழ்த்து!

image

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு நவம்பர் 9 காலை நடைபெறுகிறது. இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறை காவலர், மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கு தேர்வு நடைபெறுகிறது. காவலர் தேர்வு எழுதும் அனைவருக்கும் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விமலா அவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். உங்கள் மீது நம்பிக்கை வைத்து செயல்படுங்கள் உங்கள் ஒவ்வொரு இலக்கையும் நீங்கள் நிச்சயமாக அடைவீர்கள் என தெரிவித்துள்ளார்

News November 8, 2025

நாமக்கல் மாவட்ட இரவு ரோந்து அதிகாரிகள் பட்டியல் வெளியீடு!

image

நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (08.11.2025) இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் நான்கு சக்கர வாகன ரோந்துப் பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. மாவட்ட இரவு ரோந்து அதிகாரியாகத் திரு. சக்திவேல் (காவல் கண்காணிப்பாளர், ஆயுதப்படை) நியமிக்கப்பட்டுள்ளார். பொதுமக்கள் அவசர உதவிக்கு 100 அல்லது மாவட்டக் கட்டுப்பாட்டு அறை எண்ணான 94981 81216-ஐத் தொடர்பு கொள்ளலாம்.

News November 8, 2025

நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!

image

நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் இன்று நவம்பர் 8ஆம் தேதி நடைபெற்றது. இந்தக் குழு கூட்டத்தில் முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்த்தப்பட்டு, ரூ.5.65 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது. நேற்று முட்டையின் விலை ரூ.5.60 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. மழை, குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை தேவை அதிகரித்ததன் காரணமாகவே விலை உயர்ந்ததாக கூறப்படுகிறது.

error: Content is protected !!