News April 13, 2025

மொபெட் மீது டிராக்டர் மோதி ஒருவர் பலி

image

வந்தவாசியை அடுத்த நூத்தாம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமஜெயம் (46). இவரது மனைவி அஞ்சலை (39), இவர்கள் வீரம்பாக்கம் – தென்இலுப்பை சாலையில், வீரம்பாக்கம் ஏரிக்கரை அருகே மொபட்டில் சென்றனர். அப்போது, எதிரே வந்த டிராக்டர் மொபட்டி மீது மோதியது. இந்த விபத்தில் ராமஜெயம் அதே இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மனைவி அஞ்சலை படுகாயம் அடைந்தார். இதுகுறித்து, வந்தவாசி வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News November 4, 2025

திருவண்ணாமலை: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (நவ.3) இரவு 10 மணி இன்று (நவ.4) முதல் காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு சிறப்பு போலீஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் திருவண்ணாமலை, போளூர், அரணி, சோலைமலை பகுதிகளில் சிறப்பு ரோந்து நடைபெறும். அவசர நேரத்தில் 100 என்ற எண்ணிற்கு அழைக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

News November 3, 2025

தி.மலை தீபத் திருவிழா – 4,764 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

image

தி.மலை அண்ணாமலையார் கோயிலில், டிசம்பர் 3ம் தேதி கார்த்திகை தீப திருவிழா நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு ஊர்களில் இருந்து, திருவண்ணாமலைக்கு 4,764 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. அதேபோல், திருவண்ணாமலை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் 70 மினி பஸ்களும் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 3, 2025

JUST NOW: தி.மலையில் சோழர் கால தங்கப்புதையல் கண்டெடுப்பு!

image

திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலை அருகே உள்ள கோவிலூர் சிவன் கோயிலில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த சிவன் கோயில், 3ம் ராஜராஜ சோழன் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது. இந்நிலையில், கோவிலின் சிதிலமடைந்த கருவறையை கட்டுவதற்காக இன்று (நவ.3) பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது, 100-க்கும் மேற்பட்ட தங்கக்காசுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த தங்கக்காசுகளை அரசு அதிகாரிகள் தற்போது ஆய்வு செய்து வருகின்றனர்.

error: Content is protected !!