News April 13, 2025
நாமக்கல்லில் கறிக்கோழி விலை உயர்வு

நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம், நேற்று நடந்தது. அதில் முட்டை உற்பத்தி, மார்க்கெட்டிங் நிலவரம் குறித்து பண்ணையாளர்கள் விவாதித்தனர். இதையடுத்து, 415 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. ஒரு கிலோ 85 ரூபாய்க்கு விற்ற முட்டைக்கோழி விலையை, எவ்வித மாற்றமும் செய்யாமல், அதே விலையிலும் கறிக்கோழி விலையில் ரூ.7 உயர்த்தி ரூ. 96 க்கும் நிர்ணயம் செய்யப்பட்டது.
Similar News
News April 15, 2025
முட்டை கொள்முதல் விலையில் மாற்றமில்லை!

நாமக்கல் மண்டலத்தில் இன்றைய (15-04-2025) நிலவரப்படி முட்டை பண்ணை கொள்முதல் விலையில் மாற்றம் எதுவும் செய்யப்படாமல் ரூ.4.15 காசுகளாக நீடித்து வருகிறது. கடந்த (ஏப்ரல் 9) முட்டை கொள்முதல் விலை 20 காசுகள் குறைக்கப்பட்டு ரூ.4.15 ஆக நிர்ணயப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஐந்து நாட்களாக முட்டை விலையில் மாற்றம் எதுவும் செய்யப்படாமல், அதே விலையில் நீடித்து வருகிறது.
News April 15, 2025
நாமக்கல்லில் கறிக்கோழி விலையில் மாற்றம் இல்லை!

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ (உயிருடன்) ரூ.96-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. நேற்று (ஏப்.14) நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், அதன் விலையில் ரூ.10 குறைக்கப்பட்டு ஒரு கிலோ ரூ.86 நிர்ணயிக்கப்பட்டது. இன்று (15.04.2025) நடைபெற்ற கூட்டத்தில் கறிக் கோழி விலை மாற்றம் செய்யவில்லை. இதனிடையே முட்டைக்கோழி கிலோ ரூ.85- ஆகவும் அவற்றின் விலைகளில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.
News April 15, 2025
நாமக்கல் காவல் துறை சார்பில் வாகன ஏலம்!

நாமக்கல் மாவட்ட மதுவிலக்கு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள 23 வாகனங்கள் ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது. வாகனங்களை ஏலம் எடுப்பவர்கள் முன்பணமாக ரூ. 5 ஆயிரத்தை, 17ம் தேதி தேதி காலை 9 மணி முதல் 10 மணிக்குள், நாமக்கல் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் செலுத்த வேண்டும். நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு மதுவிலக்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர்களை அனுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.