News April 13, 2025
பாலியல் வழக்கில் மதபோதகர் ஜான் ஜெபராஜ் கைது

பாலியல் புகாரில் சிக்கி தலைமறைவாக இருந்த கோவையை சேர்ந்த ஜான் ஜெபராஜை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். கிறிஸ்தவ மதபோதகரான இவர் 17 மற்றும் 14 வயதுடைய 2 சிறுமிகளுக்கு தனது வீட்டில் பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக காந்திபுரம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் விசாரணைக்கு அழைக்கப்பட்ட நிலையில், கடந்த 5 நாள்களாக தலைமறைவாக இருந்த நிலையில் அவர் நள்ளிரவில் சிக்கியுள்ளார்.
Similar News
News April 29, 2025
3-வது குழந்தைக்கு சலுகை வேண்டும்: MLA கோரிக்கை

3-வது குழந்தை பெற்றுக் கொள்ள அரசு சலுகை வழங்க வேண்டும் என திமுக பர்கூர் MLA மதியழகன் கோரிக்கை விடுத்துள்ளார். மக்கள் தொகை குறைவதால் தொகுதி மறுசீரமைப்பின் போது பிரச்னை எழும் என சுட்டிக் காட்டி இந்த கோரிக்கையை அவர் சட்டமன்றத்தில் வைத்துள்ளார். ஏற்கனவே தொகுதி மறுசீரமைப்புக்கு திமுக எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் சட்டமன்ற உறுப்பினரின் கோரிக்கை கவனம் பெற்றுள்ளது.
News April 29, 2025
உற்பத்தி பாதிப்பு.. முட்டை விலை அதிகரிக்குமா?

நாமக்கல் மண்டலத்தில் வெயில் தாக்கம் காரணமாக முட்டை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. கோடை வெப்பத்தால் முட்டையிடும் கோழிகள் நாள்தோறும் உயிரிழந்து வருவதாக பண்ணை உரிமையாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். கோழிகள் உணவு உண்ணும் அளவும் குறைந்திருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். இதனால், முட்டை விலை அதிகரிக்கும் அபாயம் எழுந்துள்ளது. தற்போது முட்டை கொள்முதல் விலை 430 காசுகளாக உள்ளது.
News April 29, 2025
மத்தியஸ்தத்திற்கு வந்துள்ள இஸ்லாமிய நாடுகள்

இந்தியா-பாக். இடையே மத்தியஸ்தம் செய்வதற்கு இஸ்லாமிய நாடுகள் முன்வந்துள்ளன. பஹல்காம் தாக்குதலை அடுத்து, சிந்து நதிநீர் நிறுத்தம், பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம் என இந்தியா உக்கிரமாக உள்ளது. இந்நிலையில், சவுதி வெளியுறவுத்துறை அமைச்சர் ஃபைசல் பின் ஃபர்ஹான் அல், இந்தியா-பாக். வெளியுறவுத்துறை அமைச்சர்களிடம் பேசியுள்ளார். சமாதானப் பேச்சுவார்த்தையை ஒருங்கிணைக்க தயார் என ஈரானும் முன்வந்துள்ளது.