News April 13, 2025

கிரேனில் இருந்து மரம் விழுந்து தொழிலாளி பலி

image

புழல் கதிர்வேடு பகுதியில், குஜராத்தை சேர்ந்த சஞ்சித் என்பவருக்கு சொந்தமான மர கிடங்கு உள்ளது.கதிர்வேடு விநாயகர் கோவில் தெருவில் வசிக்கும் ராஜேஷ் என்கிற ஜான், 33.நேற்று மதியம், லாரியில் இருந்து கிரேன் வாயிலாக மரங்களை இறக்கும் போது திடீரென கிரேனில் இருந்த மரம் ஜான் மீது விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே ஜான் தலை நசுங்கி பலியானார்.புழல் போலீசார் உடலை மீட்டு, ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Similar News

News April 27, 2025

13 இடங்களில் ஸ்பா மூலம் பாலியல் தொழில்

image

அண்ணாநகரில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஸ்பா என்ற பெயரில் வெளிமாநில பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய மேனேஜர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். ஸ்பா சென்டர் உரிமையாளர் ஹேமா ஜுலியோ (50) தலைமறைவாகிவிட்டர். போலீசார் அவரை தேடி வந்த நிலையில், மயிலாப்பூரில் கைது செய்யப்பட்டார். இவருக்கு சென்னை முழுவதும் 13+ ஸ்பா சென்டர்கள் உள்ளன. அதில் பாலியல் தொழில் நடத்தி வந்தது தற்போது தெரியவந்துள்ளது.

News April 27, 2025

சென்னையில் விமானத்தின் டயர் வெடிப்பு

image

சென்னையில் இருந்து 166 பயணிகளுடன் மும்பை புறப்பட்ட இண்டிகோ விமானத்தின் டயர் ஓடுதளத்திலேயே வெடித்துள்ளது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஓடுதளத்தில் ஓடிக்கொண்டிருந்தபோது, விமானத்தின் டயர் திடீரென வெடித்து சிதறியது. இதையடுத்து, பழுதடைந்த டயர் மாற்றப்பட்டு, இரு மணி நேரம் தாமதமாக விமானம் புறப்பட்டது. இண்டிகோ விமானத்தின் டயர் வெடிப்பு சம்பவம் சென்னையில் பரபரப்பை உருவாக்கியது.

News April 26, 2025

சென்னை “Knights on Night Rounds” விவரம்

image

சென்னை போலீசாரின் “Knights on Night Rounds” (26.04.2025) இன்று இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். *இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கட்டாயம் உதவும், பகிரவும்*

error: Content is protected !!