News April 13, 2025
காஞ்சிபுரத்தில் உதயமாகும் இரு பிர்காக்கள்

சட்டசபை மானிய கோரிக்கை அறிவிப்பில், வருவாய் துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், காஞ்சிபுரத்தில் புதிதாக இரண்டு பிர்காக்கள் உருவாக்கப்படும் என, தெரிவித்தது. காஞ்சிபுரம் பிர்காவை பிரித்து, செவிலிமேடு மற்றும் விஷ்ணுகாஞ்சி என, இரண்டு பிர்கா உருவாக்க, வருவாய் துறையினர், கருத்துரு அனுப்பியுள்ளது. காஞ்சிபுரம் பிர்காவை பிரிக்க வருவாய் துறையினர் நீண்ட நாட்களாக கோரி வந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 4, 2025
காஞ்சிபுரம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (நவம்பர். 03) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News November 3, 2025
காஞ்சிபுரம் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் நவ.4 முதல் நவ. 25 வரை வீடு வீடாக சென்று கணக்கெடுக்கும் பணி நடைபெறவுள்ளது. டிசம்பர் 9 வரை வாக்காளர் பட்டியல், டிசம்பர் 9 முதல் ஜனவரி 8 வரை வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல் திருத்தல் முகாம் இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி மாதத்தில் வெளியிடப்படும் என்று ஆட்சியர் கலைச்செல்வி மோகன் அறிவித்துள்ளார்.
News November 3, 2025
காஞ்சிபுரம்: இளைஞர்களே செம வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க

தமிழ்நாட்டை சேர்ந்த 1 லட்ச மாணவர்கள் மற்றும் வேலையில்லாத இளைஞர்களுக்கு மத்திய அரசால் சான்றளிக்கப்பட்ட 100 கணினி மென்பொருள் திறன் படிப்புகள் வழங்கப்படுகிறது. இதற்கு 10,+2 தேர்ச்சி, பொறியியல், பட்டம், முதுகலை, எம்பிஏ, பாலிடெக்னிக் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள்<


