News April 13, 2025
உங்களுக்கென நேரம் ஒதுக்குறீங்களா?

கடமைகள் நிறைந்த வாழ்வில் குடும்பத்துக்காக ஓடுபவர்களே! ஒரு நிமிடம் அந்த ஓட்டத்தை நிறுத்தி, உங்களுக்காக ஒரு நாளில் எவ்வளவு நேரம் ஒதுக்குகிறீர்கள் என யோசியுங்கள். இயற்கையின் கொடையான வாழ்க்கையில் நமக்கென கொஞ்சம் நேரம் வேண்டும். கடமையை விட்டு, கனவுகளை நோக்கி ஓடுங்கள் என கூறவில்லை. பிடித்த படம், நண்பரை சந்திப்பது என மன நிறைவை கொடுக்கும் சின்ன சின்ன விஷயங்களை செய்யுங்கள். அன்றைய நாள் அழகாகும்.
Similar News
News September 7, 2025
BREAKING: நாடு முழுவதும் விலை குறைகிறது

GST 2.0 எதிரொலியாக ஹுண்டாய் நிறுவனம், தங்களது கார்களின் விலையை ₹2.40 லட்சம் வரை குறைத்துள்ளது. முன்னதாக, ரெனால்ட், டொயோட்டா, மஹிந்திரா, மாருதி சுசூகி, டாடா மோட்டர்ஸ் நிறுவனங்கள் கார்களின் விலையை குறைத்தன. வரும் 22-ம் தேதி முதல் இந்த விலை குறைப்பு அமலுக்கு வர உள்ளது. ஹுண்டாய் நிறுவனம் குறைத்த கார் மாடல்களின் விலையை மேலே உள்ள போட்டோக்களை Swipe செய்து தெரிந்து கொள்ளவும்.
News September 7, 2025
Gpay, Phonepe-ல் வரம்பு ₹10 லட்சமாக அதிகரிப்பு

வரும் செப்.15 முதல், UPI பரிவர்த்தனைகளுக்கான (P2M) தினசரி வரம்பு ₹10 லட்சமாக உயர்த்தப்படுவதாக NPCI அறிவித்துள்ளது. தற்போது UPI மூலம் ஒரு நாளைக்கு ₹1 லட்சம் வரை தான் அனுப்ப முடியும். இதனால், இன்ஷூரன்ஸ், வரிகள், ஸ்டாக் முதலீடு, கிரெடிட் கார்டு கட்டணங்கள் செலுத்துவதில் சிரமம் உள்ளது. இதை போக்கும் வகையில் இனி ஒரு முறைக்கு அதிகபட்சம் ₹5 லட்சம், ஒரு நாளைக்கு ₹10 லட்சம் என வரம்பு உயர்த்தப்படுகிறது.
News September 7, 2025
மகளிர் உரிமை தொகை நிச்சயம்: உதயநிதி உறுதி

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் விண்ணப்பித்த தகுதியுள்ள மகளிருக்கு நிச்சயம் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என DCM உதயநிதி தெரிவித்துள்ளார். திருமண நிகழ்ச்சியில் பேசிய அவர், தற்போது 1.20 கோடி பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் நிலையில், அது மேலும் அதிரிக்கப்படும் என உறுதி அளித்தார். பின்னர் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தை சேர்ந்த பெண்களுக்கு திருமண உதவித்தொகையை அவர் வழங்கினார்.