News April 13, 2025
புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு

புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக வெயிலில் தாக்கம் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும். நாளை முதல் 18ம் தேதி வரை, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்யக் கூடும் என்று தெரிவித்துள்ளது.
Similar News
News August 13, 2025
மசாலா பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி

புதுவை குயவர்பாளையம் லெனின் வீதியில் உள்ள இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு, புதுவையை சேர்ந்த 18 முதல் 45 வயதுள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஊறுகாய் வகை, வத்தல் வகை, அப்பளம் வகை, மாசாலா பொடிகள் உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் 88704 97520, 0413-2246500 எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
News August 13, 2025
புதுவை முதலமைச்சரின் புதிய அறிவிப்பு!

எய்ட்ஸ் தொற்றுள்ள பெற்றோர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி 1 முதல் 5-ம் வகுப்பு வரை தலா ரூ.5 ஆயிரமும், 6 முதல் 8-ம் வகுப்பு வரை ரூ.10 ஆயிரமும், 9 முதல் 12-ம் வகுப்பு வரை ரூ.15 ஆயிரமும், கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு ரூ.20 ஆயிரமும் உதவித்தொகை வழங்கப்படும். இது விரைவில் செயல்படுத்தப்படும்.” என்று முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். SHARE IT NOW…
News August 13, 2025
புதுச்சேரி காவல்துறையில் வேலை-APPLY NOW

புதுச்சேரி காவல்துறையில் காலியாக உள்ள 70 சப்-இன்ஸ்பெக்டர்கள், 148 கான்ஸ்டபிள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. தகுதியும், விருப்பம் உள்ள புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இன்று (ஆக.13) காலை 10 மணி முதல் வரும் செப்டம்பர் 12-ம் தேதி மாலை மாலை 3 மணிக்குள் https://recruitment.py.gov.in/ என்ற இனையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். இத்தகவலை அனைவருக்கும் SHARE செய்ங்க..