News April 13, 2025
65 வயதில் மறுமணம்; சித்த மருத்துவரை ஏமாற்றிய பெண்

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் ராமநாதன்(65). சித்த மருத்துவரான இவரை, திருமணம் செய்துகொள்வதாகச் கூறி, நகைகள் வாங்கி ஏமாற்றிய வழக்கில் 57 வயதான கீதா என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் இதே மாதிரியான மோசடிகளில் ஈடுபட்டுள்ளது விசாரணையில் தெரியவந்தது. போலீசார் நகைகள் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்து, கீதாவை சிறையில் அடைத்தனர்.
Similar News
News October 29, 2025
அரசு சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த கண்காட்சி

இன்று (29.10.2025) செய்யார் வட்டம், புளியரம்பாக்கத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் அரசு சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து அமைக்கப்பட்ட கண்காட்சியை, ஆட்சியர் க.தர்ப்பகராஜ் பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தரணிவேந்தன், செய்யார் சட்டமன்ற உறுப்பினர் ஒ.ஜோதி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
News October 29, 2025
முகாமில் பங்கேற்ற எம்.பி தரணிவேந்தன்

இன்று அக்.29 செய்யாறு வட்டம், புளியரம்பாக்கம் தனியார் திருமண மண்டபத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. ஆட்சியர் க.தர்ப்பகராஜ் மக்கள் தொடர்பு திட்ட முகாமில் கலந்து கொண்டு, அரசு சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து அமைக்கப்பட்ட கண்காட்சி, மருத்துவ முகாமை பார்வையிட்டு, சிறப்புரையாற்றி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். உடன் எம்பி தரணிவேந்தன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
News October 29, 2025
இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (அக்.29) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


