News April 13, 2025
சார்ஜில் இருந்த இ-பைக் எரிந்து நாசம்

திருப்பத்துார், வாணியம்பாடி ஆசிரியர் நகரை சேர்ந்தவர் முனீர் அஹமத் (56). இவர் நேற்று மதியம் தன்னுடைய இ-பைக்கை, வீட்டின் போர்டிகோவில் சார்ஜிங் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மின்கசிவு காரணமாக இ-பைக் எரிய தொடங்கியது. அதிர்ச்சியடைந்த அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மின் இணைப்பை துண்டித்து, உடனடியாக தண்ணீர் ஊற்றி தீயை கட்டுப்படுத்தி அணைத்தார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
Similar News
News September 18, 2025
திருப்பத்தூர்: இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்

செப்டம்பர் 18 திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணியில் காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் மக்கள் தங்கள் அவசர காலத்தில் உட்கோட்ட போலீஸ் அதிகாரியை மேற்கொண்டு தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி என்னும் பெயரும் வழங்கப்பட்டுள்ளது.
News September 18, 2025
ஆபத்தன இடங்களில் புகைப்படம் எடுக்க வேண்டாம்

திருப்பத்தூர் மாவட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் இன்று (18-09-2025) திருப்பத்தூர் மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. அதில், மாவட்ட மக்கள் ஆபத்தான இடங்களில் புகைப்படம் எடுக்க வேண்டாம் என்றும், அவ்வாறு செய்வதால் எதிர்பாராத அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாகவும், இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என எச்சரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
News September 18, 2025
திருப்பத்தூர்: 10th, ITI போதும் அரசு துறையில் வேலை!

திருப்பத்தூர் மக்களே நாளையே கடைசி நாள்! தேர்வு இல்லாமல் அரசு வேலை. தமிழ்நாடு அரசு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்படவுள்ளது.10th, ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.19,500 – ரூ.71,900 வரை வழங்கப்படும். செப்.,19 நாளையே கடைசி நாள் என்பதால் வேலை தேடுபவர்கள் <