News April 13, 2025
விருத்தாசலம் அருகே 390 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த வயலூரில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த காரை சோதனை செய்ததில், 390 கிலோ குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போதைப் பொருட்கள் மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News October 31, 2025
கடலூர் அருகே மின்சாரம் தாக்கி பரிதாப பலி

கம்மாபுரம் அடுத்த கத்தாழை கிராமத்தை சேர்ந்தவர் குப்புசாமி (70). இவர் அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது நிலத்தில் கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில், நேற்று பகல் 2 மணியளவில் வயலுக்கு சென்ற முதியவர் அருகில் உள்ள நிலத்தில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்துள்ளார். அப்போது, மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து கம்மாபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News October 31, 2025
கடலூர்: பாம்பு கடித்து பெண் பரிதாப பலி

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள ஒறையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பத்மா (50). விவசாய கூலித்தொழிலாளியான இவர் இன்று கடலூர் சத்திரம் அருகே கோரணப்பட்டு பகுதியில் உள்ள கரும்பு சோலை ஒன்றில் வேலை பார்த்து கொண்டிருந்த போது விஷப் பாம்பு ஒன்று கடித்துள்ளது. இதில் பத்மா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
News October 31, 2025
கடலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

புனித ஹஜ் பயணம் மேற்கொள்வர்களுக்கு சேவையாற்றும் ஆய்வாளர் குழு உறுப்பினர் பணியிடத்திற்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்த மேலும் விவரங்களை அறிய www.hajcommittee.go.in என்ற இணைய முகவரியை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


