News April 13, 2025

விழுப்புரம்: மாணவர்கள் வழிகாட்டி நிகழ்ச்சி

image

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள கலைஞர் அறிவாலயத்தில் இன்று(ஏப்.13) காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மாணவர்கள் வழிகாட்டி 2025 நிகழ்வு நடைபெற உள்ளது. மாணவர்கள் +2 முடித்த பிறகு என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? என குழப்பத்தில் இருப்பார்கள். இதற்கு தீர்வுகாணும் பொருட்டு இந்த வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. விஜய் இன்போ மீடியா இணைந்து நடத்தும் இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம்.

Similar News

News September 22, 2025

காவல்துறை எச்சரிக்கை: போலி ஆன்லைன் முதலீடுகளில் கவனம்

image

‘முதலீடு செய்தால் இரண்டு மடங்கு லாபம்’ என வரும் போலியான அழைப்புகள், குறுஞ்செய்திகள் மற்றும் இணையதள இணைப்புகளை நம்ப வேண்டாம் என விழுப்புரம் மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. போலீஸ் டுடே குற்றப் புலனாய்வுப் பத்திரிகையில் இன்று (செப். 22) வெளியிட்ட அறிவிப்பில், மோசடிகள் மூலம் பொதுமக்கள் தங்கள் பணத்தை இழக்க நேரிடும், எனவே விழிப்புடன் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

News September 22, 2025

விழுப்புரத்தில் மக்கள் குறைதீர் கூட்டம்

image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டார். மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார். ஒவ்வொரு மாதமும் திங்கட்கிழமை நடைபெறும் இந்த கூட்டத்தில், பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக அளித்து வருகின்றனர்.

News September 22, 2025

விழுப்புரம்: அச்சுறுத்தும் கஞ்சா – அதிரடி கைது

image

விழுப்புரம் மாவட்டம் வெள்ளிமேடு பேட்டை பகுதியில் இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தி வந்த 5 இளைஞர்களை போலீசார் இன்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 5.5 கிலோ கஞ்சா, செல்போன் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

error: Content is protected !!