News April 13, 2025
யாருடன் சேர்ந்தாலும் பாஜகவுக்கு தோல்விதான்: CM

அதிமுக- பாஜக கூட்டணி என்பது தோல்விக் கூட்டணி என ஸ்டாலின் விமர்சித்துள்ளார். அதிமுக தலைமையை மிரட்டி பணிய வைத்து தன்னுடைய சதித் திட்டங்களை பாஜக நிறைவேற்றப் பார்க்கிறது. பாஜக தனியாக வந்தாலும், எவர் துணையோடு வந்தாலும் மக்கள் தக்கப்பாடம் புகட்டக் காத்திருக்கின்றனர்; சுயமரியாதையின்றி டெல்லிக்கு மண்டியிட்டு தமிழகத்தை அடகு வைக்கும் துரோகக் கூட்டத்துக்கு மக்கள் தக்க விடையளிப்பார்கள் என கூறியுள்ளார்.
Similar News
News April 15, 2025
அமைச்சரவையை கூட்டுகிறார் ஸ்டாலின்

தமிழக அமைச்சரவைக் கூட்டம் வரும் 17ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு தலைமை செயலகத்தில் நடைபெறும் என்று அரசு அறிவித்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இக்கூட்டம் நடைபெறவுள்ளது. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு ஒப்புதல் கொடுப்பது, புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் கொடுப்பது ஆகியவை குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது.
News April 15, 2025
டாய்லெட் பேப்பரில் ராஜினாமா கடிதம்.. இது வேற ரகம்

பல நிறுவனங்களில் ஊழியர்களை தேவைக்கு பயன்படுத்திவிட்டு பின் குப்பை போல் தூக்கி எறிவதை பார்த்திருப்போம். இதனை உணர்த்தும் வகையில் ஊழியர் ஒருவர் ராஜினாமா செய்த விதம் பலரின் கவனத்தை பெற்றுள்ளது. சிங்கப்பூரில் தன்னை சரியாக நடத்தாத நிறுவனத்துக்கு, டாய்லெட் பேப்பரில் ஊழியர் ராஜினாமா கடிதத்தை எழுதியுள்ளார். ஆஞ்சிலா யோஹ் என்ற பெண் தொழிலதிபர் இச்சம்பவத்தை Linkedin பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
News April 15, 2025
கம்பேக் கொடுப்பாரா சிபிராஜ்?

சிபிராஜ் நடித்துள்ள ‘டென் ஹவர்ஸ்’ வரும் 18-ம் தேதி வெளியாகிறது. 3 வருடங்களுக்கு பிறகு அவரது படம் ரிலீசாகிறது. இப்படம் நன்றாக அமைந்திருப்பதாகக் கூறப்படும் நிலையில், தனக்கு திருப்புமுனையாக இருக்கும் என அவர் தீவிரமாக நம்பி வருகிறார். அவரது 22 வருட சினிமா கெரியரில் ‘நாய்கள் ஜாக்கிரதை’, ‘ஜாக்சன் துரை’ ஆகிய 2 படங்கள் மட்டுமே ஹிட் அடித்துள்ளன. கடைசியாக அவரது ‘வட்டம்’ படம், 2022-ல் OTT-யில் ரிலீசானது.