News April 13, 2025
பரிதாபமான நிலையில் CSK

ஐபிஎல் வரலாற்றில் 5 முறை சாம்பியன்களான CSK, MI ஆகிய அணிகள் புள்ளிப்பட்டியலில் கடைசி 2 இடங்களில் உள்ளன. குறிப்பாக IPL-லில் அதிக ரசிகர் பட்டத்தை வைத்துள்ள CSK கடைசி இடத்தில் உள்ளது. பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திலும் சொதப்பி வரும் CSK வரும் போட்டிகளில் சிறப்பாக விளையாடினால் மட்டுமே தகுதிச் சுற்றுக்கும் முன்னேற முடியும். இல்லையென்றால், லீக் சுற்றுடன் வெளியேறும் நிலை ஏற்படும்.
Similar News
News April 15, 2025
மீண்டும் வேகமெடுக்கும் வெள்ளி விலை.. ₹2,000 உயர்வு

சென்னையில் <<16104127>>தங்கம் விலை<<>> இன்று குறைந்த போதிலும் வெள்ளி விலை கிலோவுக்கு ₹2,000 அதிகரித்துள்ளது. இதனால் ஒரு கிராம் ₹110-க்கும், பார் வெள்ளி ஒரு கிலோ ₹1,10,000-க்கும் விற்பனையாகிறது. கடந்த சில மாதங்களாக தங்கத்துடன் போட்டிப் போட்டுக்கொண்டு உயர்ந்து வந்த வெள்ளி, தங்கத்தின் விலை குறையும்போது குறைந்து வந்தது. ஆனால், இன்று தங்கம் விலை குறைந்த போதிலும் வெள்ளி விலை உயர்ந்துள்ளது கவனிக்கத்தக்கது.
News April 15, 2025
ஆண்களின் விஸ்வாசத்திற்கு இதுதான் சாம்பிள்..!

ஆண்கள் இவ்வளவு விஸ்வாசமானவர்களா என ஆச்சரியப்பட வைக்கும் ஒரு ஆய்வு முடிவு இங்கிலாந்தில் வெளியாகியுள்ளது. Capital Hair and Beauty என்ற நிறுவனம் நடத்திய ஆய்வின்படி, 75% ஆண்கள் தங்கள் துணையைவிட பார்பருக்கு அதிக விஸ்வாசமாக இருக்கிறார்களாம். காதலியை ஏமாற்றுவதைவிட பார்பரை ஏமாற்றுவதுதான் அதிக குற்ற உணர்ச்சியை கொடுக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளார்கள். இதுபற்றி உங்க கருத்து என்ன?
News April 15, 2025
உச்சத்தில் பங்குச் சந்தைகள்.. உற்சாகத்தில் முதலீட்டாளர்கள்!

தொடர் விடுமுறைக்கு பிறகு இன்று வர்த்தகத்தை தொடங்கிய பங்குச் சந்தையின் நிலவரம் முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. சென்செக்ஸ் 1,595 புள்ளிகள் அதிகரித்து 76,753 புள்ளிகளிலும், நிப்டி 494 புள்ளிகள் அதிகரித்து 23,324 புள்ளிகளிலும் வர்த்தகமாகி வருகின்றன. டாடா மோட்டார்ஸ், ஸ்ரீராம் பைனான்ஸ், மகிந்திரா, HDFC வங்கி உள்ளிட்ட பங்குகளின் விலை கணிசமாக உயர்ந்துள்ளன.