News April 13, 2025
கடன்களுக்கான வட்டியை குறைத்த IOB வங்கி

ரெப்போ வட்டி விகிதத்தை RBI குறைத்ததையடுத்து, முக்கிய வங்கிகள் <<16049712>>கடன்கள்<<>> மீதான வட்டியை குறைத்து வருகின்றன. அதன்படி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியும் (IOB) தற்போது ரெப்போவுடன் இணைக்கப்பட்டுள்ள கடன்கள் மீதான வட்டியை 9.10%ல் இருந்து 8.85% ஆக (25 புள்ளிகள்) குறைக்க முடிவு செய்துள்ளது. இது இன்று முதல் (ஏப்.12 முதல்) அமலுக்கு வந்துள்ளது. SHARE IT.
Similar News
News April 15, 2025
விசுவாசுவ ஆண்டு எப்படி இருக்கும்?

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், இந்த ஆண்டு புதிய உச்சத்தை தொடும் என விசுவாவசு பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜோதிர்லிங்க தலமான ராமேஸ்வரத்தில் தமிழ்ப் புத்தாண்டையொட்டி பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது. அதில், தான் தங்கம் விலை அதிகரிக்கும், வைரம் விலை குறையும் என கூறப்பட்டுள்ளது. தனுஷ்கோடியை புயல் தாக்கும். புதிய வைரஸ் நோய்கள் பரவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News April 15, 2025
திண்டுக்கல் சீனிவாசன் ஹாஸ்பிடலில் அனுமதி

அதிமுக முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான திண்டுக்கல் சீனிவாசன் சென்னையில் உள்ள பிரபல தனியார் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்றிரவு உணவு ஒவ்வாமை காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டதால் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
News April 15, 2025
உக்ரைன் – ரஷ்யா போருக்கு இவரே காரணம்: டிரம்ப்

உக்ரைன் – ரஷ்யா போருக்கு இவர்தான் காரணம் என பைடனை கைகாட்டியிருக்கிறார் டிரம்ப். 2020 தேர்தல் முடிந்து அமெரிக்க அதிபராக பைடன் தேர்வானது தான் வரலாற்று பிழையாக மாறிப் போனதாகவும், உக்ரைன் – ரஷ்யா இடையிலான போரை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்த அவர் தவறிவிட்டார் என்றும் குற்றம்சாட்டியிருக்கிறார். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் இந்த விவகாரத்தை சரியாக கையாளவில்லை என விமர்சித்துள்ளார்.