News April 13, 2025
அபிஷேக் சர்மா அதிரடி சதமடித்து அசத்தல்..!

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 40 பந்துகளில் சதமடித்து ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா அசத்தியுள்ளார். பஞ்சாப் பந்துவீச்சை பறக்கவிட்ட அவர், 11 பவுண்டரிகள், 6 சிக்சர்கள் விளாசியுள்ளார். சதமடித்த அபிஷேக் சர்மா, ‘THIS ONE IS FOR ORANGE ARMY’ என்று எழுதப்பட்டிருந்த பேப்பரை ரசிகர்களுக்காக எடுத்துக் காட்டினார். அவரது அதிரடியாக ஹைதராபாத் அணி வெற்றி பெறும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
Similar News
News November 3, 2025
இன்று முதல் வீடு தேடி வரும் ரேஷன் பொருள்கள்

முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் சென்னையில் இன்று நவம்பர் 3ஆம் தேதி முதல் 6ம் தேதி வரை சிறப்பு விநியோகம் நடைபெறும் என கூட்டுறவு துறை அறிவித்துள்ளது. ஆலந்தூர், அண்ணா நகர், திரு வி.க. நகர், அடையார், திருவொற்றியூர், மணலி, மாதவரம், ராயபுரம், அம்பத்தூர், வளசரவாக்கம் கோடம்பாக்கம் ஆகிய 15 மண்டலங்களின் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 3, 2025
BREAKING: தமிழகத்தை உலுக்கிய சம்பவம்

கோவையில் ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவியை தூக்கிச் சென்று 3 இளைஞர்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை ஏர்போர்ட் பின்புறம் உள்ள சாலையில், மாணவியின் ஆண் நண்பரை கொடூரமாக தாக்கிவிட்டு மாணவியை வன்கொடுமை செய்துள்ளனர். இளைஞர் கோவை GH-ல் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அந்த 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
News November 3, 2025
₹51 கோடி வழங்கும் BCCI!

உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு, BCCI ₹51 கோடி பரிசுத்தொகை அறிவித்துள்ளது. இத்துடன் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு, ICC ₹39.78 கோடி பரிசுத் தொகை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. ICC வழங்கிய கடந்த உலகக் கோப்பை பரிசுத் தொகையை காட்டிலும் இது 239% அதிகமாகும்.


