News April 12, 2025
பாமகவுக்கு நானே தலைவர்.. அன்புமணி அறிக்கை

பாமகவுக்கு தாமே தலைவராக தொடர்வதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். கட்சி விதிப்படி பொதுக்குழுதான் தம்மை 2022இல் தலைவராக தேர்ந்தெடுத்ததாகவும், அதை தேர்தல் ஆணையமும் அங்கீகரித்திருப்பதாகவும், ஆதலால் தலைவராக தாம் தொடர்ந்து செயல்படுவேன் எனவும் அன்புமணி கூறியுள்ளார். 2026 தேர்தலில் வலிமையான கூட்டணியை அமைக்க வேண்டியது தமது கடமை என்றும், அது தமது தலையாய பணியாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News September 4, 2025
பெண் SP-ஐ பொமேரியன் நாய் என விமர்சித்த பாஜக MLA

பெண் எஸ்.பி.,யை ‘பொமேரியன் நாய்’ என கூறியதற்காக கர்நாடக பாஜக MLA ஹரீஷ் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. சமீபத்திய நிகழ்வில் பேசிய அவர், MLA-வான என்னை பார்த்தாலே முகத்தை திருப்பிக்கொள்ளும் SP, ஷாமனூர் குடும்ப உறுப்பினர்களுக்காக வாசலில் பொமேரியன் நாய் போல் காத்திருக்கிறார் என்று சர்ச்சையாக பேசினார். மூத்த காங்., தலைவரான ஷாமனூர் சங்கரப்பா ஒரு MLA, அவரது மகன் அமைச்சர், மருமகள் MP என உள்ளனர்.
News September 4, 2025
தவெக தொண்டர் மரணத்தில் மர்மம்: சகோதரர் புகார்

கடந்த ஆக.20-ல் மதுரை தவெக மாநாட்டுக்குச் சென்ற மதன் என்பவர், ஆக.27-ல் துவரங்குறிச்சி அருகே சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இந்நிலையில், மதனின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், எனவே இதுகுறித்து உரிய விசாரணை நடத்த கோரி அவரது சகோதரர் சீனிவாசன் வேலூர் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். யூடியூபர் முக்தார் அழைப்பின் பேரில் ஷபீர் என்பவர் மதனை அழைத்துச் சென்றதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
News September 4, 2025
இந்த 8 மூலிகைகள் போதும்.. குடல் பிரச்னை பறந்து போகும்!

உணவே மருந்து என்ற வரையறுத்து வாழ்ந்தவர்கள் நம் முன்னோர்கள். ஆனால், இன்றைய வாழ்க்கை முறை மாற்றங்களால், பல நோய்கள் நம்மை தாக்குகின்றன. நம்முடைய பாரம்பரிய உணவுமுறைகளை பின்பற்றாததே இதற்கு முக்கிய காரணம். அந்த வகையில், வயிறு, குடல் சார்ந்த பாதிப்புகளை குணப்படுத்தும் 8 சிறந்த மூலிகைகளை ஹார்வார்ட் பல்கலை.,யில் பயிற்சி இரப்பை குடல் நிபுணரான டாக்டர் சௌரவ் பட்டியலிட்டுள்ளார். அதை இந்த தொகுப்பில் காணலாம்.