News April 12, 2025
சோலார் பவர் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் ரத்து: அரசு

வயலில் சோலார் பம்ப் செட் அமைத்த விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை தமிழக அரசு ரத்து செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அனைத்து மின்சார வாரிய கள அதிகாரிகளுக்கும் தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் சுற்றறிக்கை அனுப்பி இருப்பதாகவும், அதில் இலவச மின்சாரம் கோரி வந்துள்ள புதிய விண்ணப்பங்கள், ஏற்கெனவே நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை நிராகரிக்கும்படி உத்தரவிட்டுள்ளதாகக் சொல்லப்படுகிறது.
Similar News
News September 5, 2025
கல்லூரி மாணவர்களுக்கு மாதம் ₹1000 கொடுக்கும் திட்டம்

தமிழ் புதல்வன் திட்டம் மூலம், 6-12ம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி செல்லும் மாணவர்களுக்கு மாதம் ₹1000 வழங்கப்படுகிறது. 21-30 வயதுக்குள் இருக்கும் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். தனியார் பள்ளியில் படித்த மாணவர்கள், தொலைதூரக் கல்வி மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியாது. https://umisdashboard.tnega.org/auth/login – ல் விண்ணப்பியுங்கள். SHARE.
News September 5, 2025
வியக்க வைக்கும் இந்த உண்மை தெரியுமா?

மனிதர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் பல வியக்க வைக்கும் உண்மைகள் நம்மை சுற்றியே உள்ளன. அதை யாராவது நமக்கு சொல்லும்போது உண்மையாவா என ஆச்சரியத்துடன் கேட்போம். அப்படி ஆச்சரியங்கள் நிறைந்த தகவல்களை, உங்களுக்காக மேலே போட்டோஸாக பகிர்ந்துள்ளோம். இந்த அரிய தகவல்களை மற்றவர்களுக்கும் பகிரலாமே…
News September 5, 2025
BREAKING: PMK ம.க.ஸ்டாலின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

பாமக மூத்த தலைவரும், ஆடுதுறை பேரூராட்சி தலைவருமான ம.க.ஸ்டாலின் மீது, அவரது அலுவலகத்தில் புகுந்த மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில், நல்வாய்ப்பாக அவர் தப்பியபோதிலும், அலுவலகத்தில் கண்ணாடி, கதவு உள்ளிட்டவை சேதமடைந்துள்ளது. தற்போது ராமதாஸின் ஆதரவாளராக உள்ள ம.க.ஸ்டாலின், கடந்த 2024 லோக்சபா தேர்தலில் மயிலாடுதுறையில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.