News April 12, 2025
வானில் தோன்றும் அற்புதம்.. பிங்க் மூன் பார்க்க ரெடியா..!

ஏப்ரலில் வரும் முழு நிலவு ‘பிங்க் மூன்’ என அழைக்கப்படும். கிழக்கு வட அமெரிக்காவில் வசந்த காலத்தின் ஆரம்ப கட்டத்தில் Moss pink என்ற பூ பூக்கும். அதே காலக்கட்டத்தில் இந்த நிலவு தோன்றுவதால் ‘பிங்க் மூன்’ எனப்படுகிறது. உண்மையில் இது பிங்க் நிறத்தில் இருக்காது. வழக்கமான நிறத்திலேயே இருக்கும். அமெரிக்காவில் இன்றிரவு தோன்றும் பிங்க் மூன், இந்தியாவில் நாளை அதிகாலை 5 மணிக்கே தெரியும். மிஸ் பண்ணிடாதீங்க!
Similar News
News October 21, 2025
போலீஸ்காரர்களுக்கு PM மோடியின் ராயல் சல்யூட்!

இந்தியாவில் பணியின்போது வீர மரணமடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ’காவலர் வீரவணக்க நாள்’ அக்.21-ல் அனுசரிக்கப்படுகிறது. இதுகுறித்து பதிவிட்ட PM மோடி, காவல் துறையினரின் தைரியத்தையும் கடமையுணர்வையும் வணங்குவதாக தெரிவித்துள்ளார். மேலும், நாட்டின் பாதுகாப்பிற்காக உயிர்நீத்த அவர்களின் உன்னத தியாகத்தை நினைவுகூர்வதாகவும், அவர்கள் காட்டும் அர்ப்பணிப்புக்கு நன்றி எனவும் பதிவிட்டுள்ளார்.
News October 21, 2025
சற்றுமுன்: ஒரே நாளில் விலை ₹2,000 குறைந்தது

விர்ரென ஏறிய வெள்ளி விலை தற்போது மளமளவென சரிந்து வருகிறது. இன்று ஒரே நாளில் கிலோவுக்கு ₹2,000 சரிந்துள்ளது. இதனால், 1 கிராம் ₹188-க்கும், பார் வெள்ளி 1 கிலோ ₹1,88,000-க்கும் விற்பனையாகிறது. கடந்த செப்.1-ம் தேதி கிராம் ₹136-க்கு விற்பனையான வெள்ளி கடந்த 15-ம் தேதி வரலாறு காணாத புதிய உச்சமாக ₹207-ஐ தொட்டது. ஆனால், கடந்த 6 நாள்களில் மட்டும் கிராமுக்கு ₹19-ம், கிலோவுக்கு ₹19,000-ம் குறைந்துள்ளது.
News October 21, 2025
தீபாவளியில் வண்ணமயமான இந்திய நகரங்கள்!

காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை நாடு நேற்று மகிழ்ச்சியில் திளைத்திருந்தது. வாணவேடிக்கைகளும், பட்டாசு சத்தங்களும் நேற்றைய இரவை மறக்க முடியாத நாளாக மாற்றியது. ஒட்டுமொத்த இந்தியாவும் தீபாவளியை எப்படி கொண்டாடியது என்ற போட்டோஸை மேலே கொடுத்துள்ளோம். அவற்றை வலது புறமாக Swipe செய்து பார்க்கவும். இந்த அழகிய பதிவை நண்பர்களுக்கும் பகிருங்கள்.