News April 12, 2025

ரேஷன் அட்டைதாரர்களின் கவனத்திற்கு.!

image

சிவகங்கை மாவட்டத்தில் அந்தியோதயா அன்ன யோஜனா (AAY) மற்றும் முன்னுரிமை குடும்ப அட்டை (PHH) குடும்ப அட்டைதாரர்களின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தாங்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் உள்ள நியாய விலைக் கடைகளில் வரும் 30ஆம் தேதிக்குள் விரல் ரேகை பதிவேற்றம் (e-KYC) செய்திடல் வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று (ஏப்.12) தெரிவித்துள்ளார்.

Similar News

News April 14, 2025

கூடைப்பந்து பயிற்றுனர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

image

சிவகங்கை மாவட்ட விளையாட்டரங்கத்தில் கூடைப்பந்து பயிற்றுநராக பயிற்சி வழங்குவதற்கு, தேசிய விளையாட்டு நிறுவனம் (அ) இந்திய விளையாட்டு நிறுவனத்தால் வழங்கப்பட்ட முதுநிலை விளையாட்டு பயிற்சி சான்றிதழுடன் வருகின்ற 20.04.2025 அன்று மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மைதானத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தகவல்.

News April 14, 2025

சிவகங்கை மாவட்ட கலெக்டர் பற்றிய ஓர் தகவல்

image

தற்போது சிவகங்கை மாவட்ட ஆட்சியராக இருப்பவர் ஆஷா அஜித். இவர் 2015 IAS Batch-ஐ சேர்ந்தவர். இவரது சொந்த ஊர் கேரள மாநிலத்தில் உள்ள கொல்லம் ஆகும். இவர் பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். இவர் இதற்கு முன்பு திண்டுக்கல் மாவட்ட கலெக்டராக இருந்துள்ளார். தேவகோட்டையில் துணை ஆட்சியராகவும் பணி புரிந்துள்ளார். இவர் சிவகங்கை மாவட்ட கலெக்டராக கடந்த 2023ஆம் ஆண்டு மே மாதம் பொறுப்பேற்றுக் கொண்டார். Share.

News April 14, 2025

தமிழ் புத்தாண்டு – சித்தர்களின் அருள் வாக்கு

image

“விசுவாவசு”என்பது தமிழ் புத்தாண்டு ஆண்டின் பெயர்களில் ஒரு பெயராகும். இது தமிழ் புத்தாண்டு வருடங்களில் அறுபது பெயர்களில் 39வது பெயராகவும், சூரிய பகவானின் ஆதிக்கம் பெற்ற ஆண்டாகவும், சுபமான ஆண்டாகவும், கருதப்படுகிறது. இந்த ஆண்டில் சிவ வழிபாட்டையும், சூரிய வழிபாட்டையும் மக்கள் தினமும் செய்வது சிறப்பாக இருக்கும் என்பது சித்தர்களின் அருள்வாக்கு. 

error: Content is protected !!