News April 12, 2025

தெலுங்கானாவில் இருந்து 2,650 டன் அரிசி நாகர்கோவில் வருகை

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்திற்காக வெளி மாநிலங்களில் இருந்து அரிசி வந்து கொண்டிருக்கிறது. இன்று தெலுங்கானாவில் இருந்து 2,650 டன் அரிசி இன்று சரக்கு ரயில் மூலம் நாகர்கோவில் ரயில் நிலையம் வந்தடைந்தது. அங்கிருந்து அவை லாரிகள் மூலம் ஏற்றப்பட்டு பள்ளி விளையில் உள்ள மத்திய சேமிப்பு கிட்டங்கிக்கு கொண்டு சென்று இருப்பு வைக்கப்பட்டது.

Similar News

News April 14, 2025

குலசேகரத்தில் புத்தகக் கண்காட்சி ஏராளமானோர் பங்கேற்பு

image

குலசேகரம் கான்வென்ட சந்திப்பு மனுவேல் மண்டப வளாகத்தில் NCBH புத்தக நிலையம் சார்பில் இன்று தமிழ்ப் புத்தாண்டு மற்றும் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த புத்தக கண்காட்சியில் பல்வேறு வகையான புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. புத்தக கண்காட்சியை அப்பகுதியில் உள்ள ஏராளமானவர்கள் வந்து பார்வையிட்டு புத்தகங்களை வாங்கிச் சென்றனர்.

News April 14, 2025

குமரியில் 2.68 லட்சம் பேருக்கு புற்றுநோய் பரிசோதனை 

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் 2 லட்சத்து 68 ஆயிரத்து 920 பேருக்கு புற்றுநோய் தொடர்பான ஆரம்ப கட்ட பரிசோதனை அரசு மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 6,538 பேருக்கு புற்றுநோய் வருவதற்கான ஆரம்ப அறிகுறிகள் கண்டறியப்பட்டு மேல் சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதில் 133 பேர்க்கு புற்றுநோய் இருப்பது தெரியவந்துள்ளதாக  ஆட்சியர் அழகு மீனா வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 14, 2025

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் 7944 பேர் கணக்கு தொடங்கினர்

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண் குழந்தைகளின் நலனுக்காக மத்திய அரசு செல்வமகள் சேமிப்பு திட்டம் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 10 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்காக ஒரு நிதி ஆண்டுக்கு 250 முதல் அதிகபட்சம் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை செலுத்தி கணக்கு தொடங்கலாம். இந்த திட்டத்தில் குமரி மாவட்டத்தில் கடந்த நிதியாண்டு 7,944 பேர் கணக்குத் தொடங்கியுள்ளதாக தபால் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!