News April 12, 2025

நாகை: திடீர் மின்தடையா ? இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க!

image

மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. இதன்மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE!

Similar News

News April 17, 2025

நாகை: இணையதளத்தின் மூலம் உரிமம் பெறலாம்

image

நாகப்பட்டினம் மாவட்டத்தில் அனைத்து வகை கனிமங்களையும் குவாரியிலிருந்து எடுத்துச் செல்வதற்கு வழங்கப்படும் நடை சீட்டு உரிமம் வழங்கப்படுகிறது. தற்போது இணைய வழி வாயிலாக வழங்கும் நடைமுறை ஏப். 28ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது. எனவே https://mimas.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக குவாரி குத்தகைதாரர்கள் விண்ணப்பித்து நடை சீட்டு உரிமம் பெற்றுக்கொள்ளலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்கள்.

News April 17, 2025

நாகப்பட்டினம்: ரூ.56,100 சம்பளத்தில் அரசு வேலை

image

TNPSC குரூப் 1 வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. துணை ஆட்சியர், துணைக் காவல் கண்காணிப்பாளர் என மொத்தமாக 72 காலிப்பணியிடங்கள் உள்ளது. 21 முதல் 39 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பட்டபடிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.56,100 முதல் 1,77,500 வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அறிய <>tnpsc.gov.in<<>> என்ற இணையத்தில் பார்க்கலாம். இதை SHARE செய்யவும்

News April 17, 2025

நாகை மாவட்டத்திற்கு மழை எச்சரிக்கை

image

நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சை ஆகிய காவிரிப் படுகை மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை மழை வாய்ப்பு உள்ளதென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே வெளியில் செல்லும் போது குடையை எடுத்துச் செல்லுங்கள். மற்றவர்களுக்கும் இந்தத் தகவலை ஷேர் பண்ணுங்க.. உங்க ஏரியா ல மழை பெய்யுதா?

error: Content is protected !!