News April 12, 2025
இந்தியா மீது தாக்குதல் நடத்த பாக். பயங்கரவாதிகள் சதியா?

மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ராணா நாடு கடத்தப்பட்ட நிலையில், இந்திய நகரங்கள் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என உளவுத் துறை எச்சரித்துள்ளது. 2008ல் நிகழ்ந்தது போல, பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கடல் வழியாக ஊடுருவி தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உஷார்படுத்தியுள்ளது. எனவே மக்கள் அதிகம் கூடும் இடங்கள், ரயில்வே நிலையங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்தும்படி அலர்ட் செய்துள்ளது.
Similar News
News September 7, 2025
சந்திர கிரகணமும் அறிவியலும்

சந்திர கிரகணம் என்பது ஒரு அற்புதமான வானியல் நிகழ்வாகும். சந்திரன், சூரியன், பூமி ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் வரும்போது கிரகணங்கள் ஏற்படுகின்றன. சந்திர கிரகணத்தால் எந்த பேரழிவோ, உடல்நல பாதிப்போ ஏற்படாது என்கின்றனர் விஞ்ஞானிகள். எல்லா நாள்களிலும் ஏற்படுவது போலவே தான், கிரகணம் அன்றும் உடல்நலப் பிரச்னைகளும், தனிப்பட்ட பிரச்னைகளும் ஏற்படுகின்றன என்கின்றனர். மற்றவை எல்லாம் நம்பிக்கை தானாம். SHARE IT
News September 7, 2025
₹1,000 மகளிர் உரிமைத் தொகை.. தமிழக அரசு புதிய தகவல்

புதிதாக மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பித்தவர்கள் அரசின் அறிவிப்புக்காக காத்திருக்கின்றனர். வெளிநாடு சென்றுள்ள CM ஸ்டாலின் தமிழகம் திரும்பியதும் அறிவிப்பு வெளியாகும் என செய்திகள் வெளியாகின. இந்நிலையில், நாளை அவர் தமிழகம் திரும்புகிறார். அதன்பின், ஓரிரு நாள்களில் மகளிர் உரிமைத் தொகை குறித்த அப்டேட் கிடைக்கும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
News September 7, 2025
வாகன ஓட்டிகளே உஷாரா இருங்க!

போக்குவரத்து விதிகளை மீறியதாக ஈ-செலான் அனுப்பி மோசடி நடப்பதாக சைபர் கிரைம் போலீஸ் எச்சரித்துள்ளது. நீங்கள் போக்குவரத்து விதிகளை மீறியதாகவும், அதனால் அபராதம் செலுத்த வேண்டும் என்றும் வாட்ஸ் ஆப் மூலம் mparivahan செயலி எனக் கூறப்படும், ஒரு APK ஃபைல் அனுப்பப்பட்டு மோசடி நடக்கிறதாம். பொதுமக்கள் கவனமாக இருக்க போலீஸ் அறிவுறுத்தியுள்ளது. உங்களுக்கும் மோசடி மெசேஜ் வந்ததா?