News April 3, 2024
மாற்றுக்கட்சியினர் அதிமுகவில் ஐக்கியம்

காமன்தொட்டிக்குட்பட்ட மாற்று காட்சியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், முன்னாள் அமைச்சர் வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினர் கே.பி.முனுசாமி முன்னிலையில் தகவல் தொழில் நுட்பபிரிவு பிரசன்னா தலைமையில் அதிமுகவில் இணைந்தனர். இதில் மாவட்ட செயலாளர் மற்றும் கிருஷ்ணகிரி எம்.எல்.ஏ.கே. அசோக்குமார், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் கே.பி.எம். சதீஷ்குமார் உள்ளிட்ட பலர் இருந்தனர்.
Similar News
News April 16, 2025
ஜாக்கிரதை! ஒரு க்ளிக் உங்கள் வாழ்க்கையை மாற்றலாம்!

அறிமுகம் இல்லாத எண்களில் இருந்து வரும் குறுஞ்செய்திகளை நம்பி, அவற்றில் உள்ள எந்தவொரு இணையதள இணைப்பையும் (லிங்க்) கிளிக் செய்ய வேண்டாம். அவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கி சார்ந்த தகவல்கள் திருடப்படும் அபாயம் உள்ளது. சைபர் குற்றங்கள் குறித்து புகார் அளிக்க, 1930 என்ற எண்ணை அழையுங்கள். மேலும் குழந்தைகள், பெரியவர்களிடம் செல்போனை கொடுக்கும் போது கனவமாக இருங்க. ஷேர் பண்ணுங்க
News April 16, 2025
பெண்ணை ஏமாற்றி பணம் பறித்த ஜோதிடர்கள் கைது

சிங்காரப்பேட்டை அடுத்த தளபதி நகர் சேர்ந்த சரிதா. இவரிடம் உங்களுக்கு நேரம் சரியில்லை என்று கூறி காரில் வந்த 2 ஜோதிடர்கள் அவர் காதில் அணிந்திருந்த நகை மற்றும் 5000 பணத்தை வைத்து பரிகாரம் செய்வதாக கூறி நகை பணத்துடன் தப்பி ஓடினர். இதுகுறித்து சிங்காரப்பேட்டை போலீசார் நடத்திய விசாரணையில் தர்மபுரி மாவட்டம் செங்க்குட்டை பகுதியை சார்ந்த சரண், ஜீவா ஆகிய இருவரையும் கைது செய்தனர். பொதுமக்கள் ஏமாற வேண்டாம்.
News April 15, 2025
இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.