News April 12, 2025
புதுக்கோட்டை: திடீர் மின்தடையா ? இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க!

மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. இதன்மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE!
Similar News
News August 14, 2025
புதுகை: உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்

புதுகை மாவட்டத்தில் நாளை (ஆக.,14) உங்களுடன் ஸ்டாலின் முகாம் புதுகை மாநகராட்சி 16வது வார்டு வர்த்தக சங்க கட்டிடத்திலும், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு வேங்கடகுளம் சமுதாய கூடத்திலும், மணமேல்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு கட்டுமாவடி பிஎம்எஸ் திருமண மண்டபத்திலும் நடைபெறவுள்ளது. மேலும், கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு முல்லை திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளதாக ஆட்சியர் அறிவித்துள்ளார். ஷேர்
News August 14, 2025
புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு நேர ரோந்து விபரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் (ஆக.13) இரவு 10 மணி முதல் நாளை(ஆக.14) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அலுவலர்கள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல் துறை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள எண்ணை தொடர்ப்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம். அல்லது 100ஐ அழைக்கலாம். மற்றவர்களுக்கும் இதனை ஷேர் செய்யுங்கள்!
News August 13, 2025
அரசு மதுபான கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு

79வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் ஆகஸ்ட் 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளன. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இயங்கும் எஃப் எல் ஒன், எஃப் எல் 2, எஃப் எல் 3, எப் எல் ஏ3, எஃப் எல் ஏஏ உள்ளிட்ட அனைத்து மதுபான கடைகளுக்கும், மதுபான பார்களுக்கும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மு.அருணா உத்தரவு பிறப்பித்துள்ளார்.