News April 12, 2025
ஜெர்சியை மாற்றும் ஆர்சிபி அணி..!

சிவப்பு நிற ஜெர்சியில் விளையாடிவரும் ஆர்சிபி அணி, ஒவ்வொரு சீசனிலும் ஒரு போட்டியில் பச்சை நிற ஜெர்சி அணிந்து விளையாடும். மரம் நடுதல், புவி வெப்பமயமாதலை குறைப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இதன் நோக்கம். அந்த வகையில் நாளை (ஏப். 13) ராஜஸ்தான் உடனான போட்டியில் பச்சை நிற ஜெர்சியில் பெங்களூரு விளையாட உள்ளது. நடப்பு சீசனில் இதுவரை 5 போட்டிகளில் விளையாடி அந்த அணி மூன்றில் வென்றுள்ளது.
Similar News
News November 3, 2025
1,12,732 பேர் பணி நீக்கம்.. அதிரும் IT துறை!

IT துறையில், உலகம் முழுவதும் இந்த ஆண்டு மட்டும் 1,12,732 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல் IT ஊழியர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. Layoff இணையதளம் நடத்திய ஆய்வில், 218 நிறுவனங்கள் தங்கள் பணிகளில் AI டெக்னாலஜி பயன்பாட்டை அதிகரித்து, இந்த ஆள்குறைப்பு பணியில் மும்முரம் காட்டுவதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இதில், அமேசானில் மட்டும் 30,000 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
News November 3, 2025
ரயில் டிக்கெட் முன்பதிவில் வந்த அதிரடி மாற்றம்.. கவனியுங்க!

ரயில் டிக்கெட் முன்பதிவு விதிகளில், ✱முதியவர்கள், 45 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், கர்ப்பிணிகள் & மாற்றுத்திறனாளிகளுக்கு டிக்கெட் முன்பதிவு செய்யும் போதே, Lower birth வழங்கப்படும் ✱இரவு 10- காலை 6 மணி வரை மட்டுமே பயணம் செய்பவர்களுக்கு Sleeping accommodation கிடைக்கும் ✱Side upper berth முன்பதிவு செய்தவர்களுக்கு, இரவு 10- காலை 6.00 மணி வரை, Side lower berth சீட்டில் அமர உரிமை இல்லை.
News November 3, 2025
அதிகார பகிர்வு கேட்பது காலத்தின் தேவை: KS.அழகிரி

கூடுதல் தொகுதி கேட்டாலே கூட்டணிக்கு சிரமம் வந்துவிடுமா? அப்படியென்றால், நாங்கள் எதுவுமே கேட்கக் கூடாதா என KS.அழகிரி வினவியுள்ளார். அதிகாரப் பகிர்வை கேட்பது காலத்தின் தேவையாக கருதுவதாக கூறிய அவர், கூட்டணி கட்சிக்கு எதுவும் கிடைக்காதென்றால் இதற்குப் பெயர் கூட்டணியே கிடையாது எனவும் தெரிவித்துள்ளார். மேலும், கூட்டணியால் ஒருதரப்பு மட்டுமே வலிமை அடைந்துகொண்டே போவது சரியில்லை எனவும் கூறியிருக்கிறார்.


