News April 12, 2025
நீலகிரி: காவல்துறையினர் எச்சரிக்கை!

நீலகிரி மாவட்டம் சுற்றுலா மாவட்டமாக திகழ்ந்து வருவதால், நாளுக்கு நாள் சுற்றுலா பயணிகளும், சுற்றுலா வாகனங்களும் அதிகரித்த வண்ணம் உள்ளது. மேலும், உள்ளுரில் உள்ள வாகனங்கள் எண்ணிக்கையும் அதிகரித்த நிலையில், குன்னூரில் அனுமதியற்ற சாலையோரங்களில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அபராதம் விதித்து, பறிமுதல் செய்யப்படும் என்று நீலகிரி காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Similar News
News September 17, 2025
நீலகிரியில் நாளை தனியார் வேலை வாய்ப்பு முகாம்!

மாதந்தோறும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் பிங்கர் போஸ்டில் உள்ள கூடுதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் நடைபெற்று வருகிறது. இந்த மாதத்திற்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை மறுநாள் ( 19.09.2025) நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியரின் செய்தி குறிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 17, 2025
உதகை மாரியம்மன் கோயிலில் மோடி பெயரில் சிறப்பு பூஜை

உதகை அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் முன்னிட்டு நகர பாஜக சார்பில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் உதகை நகர தலைவர் ரித்து கார்திக், மாவட்ட முன்னாள் தலைவர் மோகன்ராஜ் , மாவட்ட பொருளாதார அணி தலைவர் நித்தின் சந்திர சேகர், மாவட்ட துணை தலைவர் அருண், நகர துணை தலைவர்கள் சுதாகர் மஞ்சுநாத், பட்டாபிராமன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
News September 17, 2025
நீலகிரி கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு வெளியிட்டுள்ள அறிவிப்பு: குன்னூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்திலும், கூடலூர் பழங்குடியினர் அரசு தொழிற் பயிற்சி நிலையத்திலும் கடந்த 12ஆம் தேதி முதல் நடைபெற்ற வருகிறது. பயிற்சி காலம் ஓராண்டு முதல் 2ஆண்டு வரை, கல்வித் தகுதி 8 வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை, வயது 18 முதல் 40 வயது வரை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.