News April 12, 2025

16 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

16 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பிருப்பதாக IMD தெரிவித்துள்ளது. திருப்பத்தூர், வேலூர், திண்டுக்கல், புதுக்கோட்டை, தேனி, நீலகிரியில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் எனக் கூறியுள்ளது. கோவை, திருப்பூர், மதுரை, ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், செங்கல்பட்டு, விழுப்புரம், குமரியில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக IMD கணித்துள்ளது. உங்கள் ஊரில் மழை பெய்கிறதா?

Similar News

News September 14, 2025

வங்கியில் 13,217 பணியிடங்கள்.. உடனே அப்ளை பண்ணுங்க!

image

வங்கிகளில் காலியாக இருக்கும் 13,217 பல்வேறு பணிகளுக்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்வி: பட்டம், எல்எல்பி, டிப்ளமோ, சிஏ, எம்பிஏ/பிஜிடிஎம் முடித்தவர்கள் தகுதியுடையவர்கள். முதல்நிலை, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு நடைபெறும். இதற்கு வரும் 21-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். முழு விவரங்களுக்கு <>இங்கே <<>>கிளிக் செய்யவும். SHARE IT.

News September 14, 2025

விஜய்க்கும் அந்த உண்மை தெரியும்: மா.சுப்பிரமணியன்

image

திமுக அளித்த வாக்குறுதிகளில் பலவற்றை நிறைவேற்றாமல் பொய் சொல்லி வருவதாக <<17702086>>விஜய்<<>> குற்றஞ்சாட்டியிருந்தார். இந்நிலையில், இதுகுறித்து பேசிய மா.சுப்பிரமணியன், அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படுவதாகவும், இந்த உண்மை விஜய்க்கும் தெரியும் என்றார். மேலும், விஜய் போன்றவர்கள் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி குறித்து படித்து, கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும் என்றும் சாடினார்.

News September 14, 2025

ரேஷன் பொருள்கள் கிடைக்கலையா? இத செய்யுங்க

image

நமக்கு ரேஷன் பொருட்கள் இலவசமாகவோ (அ) குறைந்த விலையிலோ கிடைப்பதால் அதனை எந்த குறையும் சொல்லாமல் ஏற்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. பொருட்களை கூடுதல் விலைக்கு விற்பது, சேவை குறைபாடு, தரம் குறைவு, பொருள்கள் கிடைக்கவில்லை போன்ற பிரச்னைகள் இருந்தால் அதனை அரசிடம் தெரிவிக்கலாம். இதற்கு, <>www.tnpds.gov.in<<>> தளத்திலோ, 1967 என்ற எண்ணிலோ புகாரளியுங்கள். இந்த முக்கியமான தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!