News April 12, 2025
சர்ச்சை பேச்சு: மன்னிப்பு கோரினார் பொன்முடி

பெண்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்காக அமைச்சர் பொன்முடி மன்னிப்பு கேட்டுள்ளார். தகாத பொருளில் தவறான சொற்களை பயன்படுத்தி தாம் பேசிய பேச்சுக்காக மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்பதாக அவர் கூறியுள்ளார். தபெதிக விழாவில் பேசியபோது பெண்கள், சைவம், வைணவம் குறித்த அவர் வெளியிட்ட கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு கனிமொழி உள்ளிட்டாேர் கண்டனம் தெரிவித்ததால், திமுகவில் அவரது பதவி பறிக்கப்பட்டது.
Similar News
News December 26, 2025
கல்வியில் கெத்து காட்டிய இந்தியா PHOTOS

மேற்கத்திய நாடுகள் தங்கள் முதல் பல்கலைகளை நிறுவுவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, இந்தியா பல்கலைக்கழகங்களுக்கு தாயகமாக இருந்துள்ளது. வானியல், கணிதம், மருத்துவம், இலக்கணம், மெய்யியல், நிர்வாகம் உள்ளிட்ட பல துறைகள் இந்தியாவில் கற்பிக்கப்பட்டுள்ளது. உலகின் மிகவும் புகழ்பெற்ற நம் நாட்டின் பழமையான பல்கலைக்கழகங்களை தெரிஞ்சுக்க, மேலே உள்ள போட்டோக்களை ஸ்வைப் பண்ணுங்க. SHARE.
News December 26, 2025
உங்கள் பிள்ளை நல்ல Mark வாங்க டிப்ஸ்!

எக்ஸாம் தொடங்கிவிட்டால், உங்கள் பிள்ளைகள் பயப்படுகிறார்களோ இல்லையோ, பெற்றோர்களாகிய உங்களுக்கு கவலை வந்துவிடும். அவர்கள் எளிதில் படித்து நல்ல மதிப்பெண்களை வாங்க சில வழிகள் உண்டு. ➤எப்படி படிக்கவேண்டும் என்பதை திட்டமிடுங்கள் ➤செல்போனை அருகில் வைக்க வேண்டாம் ➤படிப்பதை எழுதிப் பார்க்க சொல்லுங்கள் ➤கடினமான கேள்விகளுக்கு அதிக நேரம் ஒதுக்கவேண்டும் ➤தேவையான அளவு ஓய்வு எடுக்கவேண்டும். SHARE.
News December 26, 2025
இடைநிலை ஆசிரியர்கள் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு

சென்னையில் போராட்டம் நடத்திய 500-க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் இன்று கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரையும் போலீசார் மண்டபங்களில் அடைந்து வைத்துள்ளனர். இந்நிலையில் இடைநிலை ஆசிரியர்களை பேச்சுவார்த்தைக்காக தமிழக அரசு அழைத்துள்ளது. இதனால் விரைவில் இந்த போராட்டத்துக்கு ஒரு முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


