News April 12, 2025
அகாலிதளம் தலைவராக சுக்பீர் சிங் பாதல் மீண்டும் தேர்வு

சிரோமணி அகாலி தளம் தலைவராக சுக்பீர் சிங் பாதல் அறிவிக்கப்பட்டுள்ளார். பிரகாஷ் சிங் பாதலுக்கு பிறகு அகாலி தளம் தலைவராக 2008-ல் பதவியேற்ற சுக்பீர் சிங் பாதல் கடந்தாண்டு வரை அப்பதவியில் இருந்தார். சீக்கிய மதத்தின் உயரிய அமைப்பான அகால் தத் அவருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியதால், கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் தற்போது மீண்டும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
Similar News
News December 29, 2025
மோசடி புகாரில் சிக்கிய நடிகை ராணி

அலைகள், அத்திப்பூக்கள் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகை ராணி, பண மோசடி புகாரில் சிக்கியுள்ளார். கரூரில் ஹோட்டல் உரிமையாளர் ஒருவரிடம் ₹10 லட்சம், கார் உள்ளிட்டவற்றை அவர் மோசடி செய்திருப்பதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதில், பண மோசடி, கொலை மிரட்டல் பிரிவுகளில் ராணி, அவரது கணவர் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, தலைமறைவாகியுள்ள ராணியை போலீஸ் தேடி வருகிறது.
News December 29, 2025
திமுக மகளிரணி மாநாட்டில் தடபுடல் ஏற்பாடு

பல்லடத்தில் நடக்கும் திமுகவின் ‘வெல்லும் தமிழ் பெண்கள்’ மகளிரணி மாநாட்டுக்கான ஏற்பாடுகள், இளைஞரணி மாநாட்டுக்கு நிகராக தடபுடலாக நடந்துள்ளது. 1.5 லட்சம் பெண்கள் பங்கேற்கவுள்ள மாநாட்டில், நாற்காலிகள், 120 ஏக்கர் பரப்பளவில் பார்க்கிங், நொறுக்குத் தீனி, நாப்கின், பாலூட்டும் அறை, மதியம்/இரவு உணவு என பல வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இக்கூட்டத்தில் CM ஸ்டாலின் பங்கேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
News December 29, 2025
BREAKING: விஜய்க்கு கடும் எச்சரிக்கை

அதிமுக களத்தில் இல்லை என பேசுவது முட்டாள் தனம் என செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். களத்தில் இல்லாதவர்களை பற்றி பேசமாட்டேன் என விஜய் கூறியதற்கு பதிலடி கொடுத்த அவர், இப்படி சொல்ல அவனுக்கு எவ்வளவு தைரியம் இருக்கணும் என ஒருமையில் பேசினார். மேலும், முகக் கவர்ச்சியும், அடுக்கு மொழியும் இல்லாமலே EPS கூட்டத்திற்கு மக்கள் வருவதாகவும், இதை செய்யமுடியாத விஜய் நாவை அடக்கி பேசவேண்டும் எனவும் எச்சரித்துள்ளார்.


