News April 12, 2025
7 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

கோவை, நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று (ஏப்.12) ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் ( MET) கணித்துள்ளது. மேலும், தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாள்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், குறிப்பாக சென்னையில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. உங்கள் ஊரில் மழை பெய்யுதா?
Similar News
News December 21, 2025
உங்கள் குழந்தைக்கு 13 வயது ஆகிவிட்டதா? NOTE THIS!

பெற்றோர்களே, உங்கள் பிள்ளைக்கு 13 வயது ஆகிவிட்டதா? நிதி & சேமிப்பு பற்றி சொல்லிக்கொடுங்கள் ➤அத்தியாவசிய தேவைகள் மற்றும் விருப்பங்களை வேறுபடுத்திப் பார்க்க கற்றுக்கொடுங்கள் ➤வங்கி சேமிப்பு கணக்கு மூலம் பணத்தை சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கவும் ➤தேவையில்லாத கடன்களை வாங்குவதால் வரும் விளைவுகள் பற்றி கற்றுக்கொடுங்க ➤காப்பீடு செய்வதன் முக்கியத்துவத்தை பற்றி எடுத்துரையுங்கள். SHARE
News December 21, 2025
டிரம்ப், அதானிக்காக SHANTI மசோதா: காங்கிரஸ்

அணுசக்தி துறையில் தனியாரை அனுமதிக்கும் மசோதா (SHANTI) டிரம்ப் மற்றும் அதானிக்காக கொண்டுவரப்பட்டதாக காங்., குற்றஞ்சாட்டியுள்ளது. அணுமின் துறையில் அதானி கால்பதிக்க உள்ளதாக வெளியான செய்தியை பகிர்ந்து இதை குறிப்பிட்டுள்ளது. முன்னதாக, ஏதேனும் அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால், அதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்களே பொறுப்பேற்க வேண்டும் என்ற விதியை டிரம்புக்காக, பாஜக அரசு நீக்கியதாகவும் குற்றஞ்சாட்டியது.
News December 21, 2025
தங்கம் விலை தலைகீழாக குறைகிறது

<<18622770>>தங்கம் விலை<<>> புதிய உச்சத்தை தொட்டு வருவது நடுத்தர மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், தங்கம் விலை குறுகிய காலத்தில் மாபெரும் சரிவை சந்திக்கும் நிலை உருவாகியுள்ளதாக சர்வதேச செட்டில்மெண்ட் வங்கி (BIS) தெரிவித்துள்ளது. எப்போதெல்லாம் அதிக விலையேற்றத்தை தங்கம் சந்திக்கிறதோ, அந்த காலத்தில் மளமளவென விலை சரியுமாம். அதனால், அவசர அவசரமாக தங்கத்தில் முதலீடு செய்பவர்கள் உஷாரா இருங்க. SHARE IT.


